ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 26th, 04:12 pm
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை
September 26th, 04:11 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் செப்டம்பர் 26 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்
September 25th, 06:47 pm
ஜி 20 மக்கள் பங்கேற்பு இயக்கத்தில் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 5 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்திய இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி 20 தலைமை பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி 20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆரம்பத்தில் 75 பல்கலைக்கழகங்களுக்கு திட்டமிடப்பட்ட இந்த முயற்சி நிறைவாக இந்தியா முழுவதும் 101 பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.