ஜி.பி.ஏ.ஐ உச்சி மாநாடு, 2023 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 12th, 05:20 pm

எனது அமைச்சரவை சகாவான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, ஜி.பி.ஏ.ஐ.யின் பொறுப்பில் இருந்து விலகும் தலைவர், ஜப்பான் அமைச்சர் ஹிரோஷி யோஷிதா அவர்களே, உறுப்பு நாடுகளின் பிற அமைச்சர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! வணக்கம்!

செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை ஆண்டு உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

December 12th, 05:00 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கண்காட்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட தொடர்புடையோர் இணைந்த முன்முயற்சியாகும். இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவில் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைவராக இந்தியா உள்ளது.

உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 17th, 04:03 pm

140 கோடி இந்தியர்களின் சார்பாக, உலகளாவிய தென்பகுதி நாடுகளின் 2 வது குரல் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வுக்கு உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் குரல் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் உலகின் மிகவும் தனித்துவமான தளமாகும். நாம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகள், ஆனால் நமக்குள் ஒரே நலன்கள், ஒரே முன்னுரிமைகள் உள்ளன.

ஜி 20 பல்கலைக்கழக இணைப்பு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 26th, 04:12 pm

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் எனது இளம் நண்பர்களே! இன்று பாரத் மண்டபத்தில் இருப்பதை விட அதிகமானோர் இணையதளத்தில் மூலம் இணைந்துள்ளனர். ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு கனெக்ட் என்ற இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கிறேன். அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன்.

ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் உரை

September 26th, 04:11 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்தியாவின் இளைஞர்களிடையே இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றிய புரிதலை உருவாக்கவும், பல்வேறு ஜி20 நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜி20 பாரத் தலைமைத்துவத்தின் மகத்தான வெற்றி: தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்தியாவின் ஜி20 தலைமை: வசுதைவ குடும்பகம்; ஜி20 பல்கலைக்கழக இணைப்பு திட்டத்தின் தொகுப்பு; மற்றும் ஜி20 இல் இந்திய கலாச்சாரத்தை காட்சிப்படுத்துதல் என்ற 4 வெளியீடுகளையும் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 18th, 11:52 am

நமது நாட்டின் 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தையும், புதிய அவைக்குள் நுழைவதற்கு முன்பு மீண்டும் அந்த உத்வேகமூட்டும் தருணங்களையும் நினைவுகூரும் இந்த சந்தர்ப்பத்தின் பின்னணியில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திலிருந்து விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு, இந்த சபை இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்ற மாளிகை என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தில் எனது சக நாட்டு மக்களின் வியர்வை சிந்தப்பட்டது, இந்த உண்மையை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. எனது சக நாட்டு மக்களின் கடின உழைப்பு இதில் செலுத்தப்பட்டது, அந்த பணமும் எனது நாட்டு மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று பெருமையுடன் கூறுவோம்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்களவையில் பிரதமரின் உரை

September 18th, 11:10 am

இதில் அவையில் உரையாற்றிய பிரதமர், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நடவடிக்கைகள் மாற்றப்படுவதற்கு முன்பு, இந்தியாவின் 75 ஆண்டு கால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர இன்று ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். பழைய நாடாளுமன்ற கட்டடம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த கட்டடம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக செயல்பட்டதாகவும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய நாடாளுமன்றமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்டடத்தை கட்டுவதற்கான முடிவு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பணம் ஆகியவை தான் இந்தக் கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். 75 ஆண்டுகால பயணத்தில், அனைவரது மரபுகள் மற்றும் பாரம்பரியங்களில் மிகச் சிறந்தவற்றை இந்த அவை உருவாக்கியுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். நாம் புதிய கட்டடத்திற்கு மாறினாலும் இந்தப் பழைய கட்டடம் வரும் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் இது இந்திய ஜனநாயகப் பயணத்தின் பொன்னான அத்தியாயம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் பிரதமரின் அறிக்கையின் தமிழாக்கம்

September 18th, 10:15 am

சந்திரயான்-3- நிலவுப் பயண வெற்றியால், நமது மூவர்ணக் கொடி விண்ணில் பட்டொளி வீசிப் பறக்கிறது. சிவசக்தி புள்ளி புதிய உத்வேகத்தின் மையமாக மாறியுள்ளது, மேலும் திரங்கா புள்ளி நம்மை பெருமையால் நிரப்புகிறது. உலகில் இத்தகைய சாதனைகள் நிகழும்போது, அவை நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்து காணப்படுகின்றன. இந்த திறனை உலகிற்குக் காட்டும்போது, அது இந்தியாவின் வாயிலுக்கு ஏராளமான சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. ஜி 20 மாநாட்டின் வரலாறு காணாத வெற்றி, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை 60 க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்றது, சிந்தனை அமர்வுகள், உண்மையான உணர்வில் கூட்டாட்சி கட்டமைப்பின் வாழ்க்கை அனுபவம், ஜி 20 என்பதே நமது பன்முகத்தன்மை மற்றும் தனித்துவத்தின் கொண்டாட்டமாக மாறியது. ஜி 20 அமைப்பில் உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பதில் இந்தியா எப்போதும் பெருமை கொள்ளும். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் உரிமை மற்றும் ஒருமித்த ஜி20 பிரகடனம் போன்ற முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் குறிக்கின்றன.

புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர்

September 09th, 06:50 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதற்குப் பாராட்டு தெரிவித்ததோடு, ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்காக ஜி 20 உறுப்பு நாடுகளுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.

ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனம்

September 09th, 05:04 pm

இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி 20 புதுதில்லி தலைவர்களின் பிரகடனத்தை இங்கே அணுகலாம்: