நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 15th, 11:39 am
நேபாள பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கே.பி. சர்மா ஒலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்புறவின் ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நெருக்கமாகப் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
July 10th, 02:45 pm
அன்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் பிரதமர் நெஹாமருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, சிறப்பானது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சிறப்பானதாகும். நமது இருதரப்பு உறவுகள் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் பயணம் நடைபெறுவது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும்.ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 13th, 11:19 pm
இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க! என்று சொல்கிறது.ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமரின் கலந்துரையாடல்
February 13th, 08:30 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வணக்கம் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் 7 அமீரகங்கள் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினரும், அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர்.