Basic spirit of Vishwakarma Yojna is ‘Samman Samarthya, Samridhi: PM in Wardha

September 20th, 11:45 am

PM Modi addressed the National PM Vishwakarma Program in Wardha, Maharashtra, launching the ‘Acharya Chanakya Skill Development’ scheme and the ‘Punyashlok Ahilyadevi Holkar Women Startup Scheme.’ He highlighted the completion of one year of the PM Vishwakarma initiative, which aims to empower artisans through skill development. The PM laid the foundation stone for the PM MITRA Park in Amravati, emphasizing its role in revitalizing India's textile industry.

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

September 20th, 11:30 am

மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் நடைபெற்ற தேசிய பிரதமரின் விஸ்வகர்மா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 'ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாடு' திட்டம் மற்றும் 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் பெண்கள் புத்தொழில் திட்டம்' ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை வெளியிட்ட பிரதமர், பிரதமரின் விஸ்வகர்மாவின் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரையையும் வெளியிட்டார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காவிற்கு திரு மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியையொட்டி காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்.

Paralympics 2024: PM Modi congratulates Yogesh Kathuniya on winning Silver Medal

September 02nd, 08:15 pm

The Prime Minister Shri Narendra Modi today congratulated athlete Yogesh Kathuniya for winning a Silver medal in the Men's Discus Throw F56 event at the ongoing Paris Paralympics in France.

நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

August 15th, 09:20 pm

பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

August 09th, 08:14 am

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 14th, 03:45 pm

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரானும் இன்று (14.06.2024) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு திரு இம்மானுவேல் மேக்ரோன் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்து

June 06th, 03:02 pm

பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அதிபர் மேக்ரோனிடம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான, நம்பிக்கை கொண்ட உத்திசார்ந்த கூட்டாண்மையை வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.

வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 16th, 11:30 am

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தவும், அதை மக்களிடையே கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சரையும் நான் பாராட்டுகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு நீங்கள் அளித்த சிறப்பான வரவேற்பு பாரதத்தில் மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிலும் எதிரொலித்தது. இது ராஜஸ்தான் மக்களின் அடையாளம். நமது சக ராஜஸ்தானியர்கள் தாங்கள் மிகவும் நேசிப்பவர்கள் மீது தங்கள் பாசத்தைப் பொழிவதற்கு எந்த முயற்சியையும் விட்டுவைப்பதில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது, நான் ராஜஸ்தானுக்கு வருகை தந்த போதெல்லாம் நீங்கள் எங்களுக்கு அளித்த மகத்தான ஆதரவை நான் நினைவு கூர்கிறேன். நீங்கள் அனைவரும் மோடியின் உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு வலுவான 'இரட்டை இன்ஜின்' அரசை அமைத்தீர்கள். இப்போது, ராஜஸ்தானில் விரைவான முன்னேற்றத்தை நாம் காண்கிறோம். இன்று, ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளோம். இந்தத் திட்டங்களுக்கு பங்களிப்பு அளித்த ராஜஸ்தானைச் சேர்ந்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

February 16th, 11:07 am

வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் 17,000 கோடி மதிப்பிலான சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

February 14th, 02:45 pm

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மைல்கல்லை எட்டியதற்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்த அயர்லாந்து, ஃபிரான்ஸ் நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

PM addresses International Energy Agency’s Ministerial Meeting

February 14th, 02:39 pm

Addressing the Ministerial Meeting of the International Energy Agency, PM Modi said, India is home to 17% of the global population. We are running some of the world’s largest energy access initiatives. Yet, our carbon emissions account for only 4% of the global total. However, we are firmly committed to combating climate change. Our Mission LiFE focuses on pro-planet lifestyle choices for a collective impact. Reduce, Reuse, and Recycle’ is a part of India’s traditional way of life. India’s G20 Presidency also saw significant action on this front, he added.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தமது சமீபத்திய இந்தியப் பயணத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்

February 04th, 11:17 pm

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது சமீபத்திய இந்தியப் பயணம் குறித்த தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட எக்ஸ் பதிவுக்கு திரு மோடி பதிலளித்துள்ளார். தில்லியில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் போது தமது சமீபத்திய பயணத்தின் காட்சிகளைக் கொண்ட வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

முறைப்படியான யுபிஐ தொடக்கத்திற்காக ஃபிரான்சைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

February 02nd, 10:30 pm

பாரிசின் ஈஃபில் டவரில் இன்று முறைப்படியான யுபிஐ தொடக்கத்திற்காக ஃபிரான்சைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவும் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மிகச்சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார்.

Glimpses from 75th Republic Day celebrations at Kartavya Path, New Delhi

January 26th, 01:08 pm

India marked the 75th Republic Day with great fervour and enthusiasm. The country's perse culture, prowess of the Armed Forces were displayed at Kartavya Path in New Delhi. President Droupadi Murmu, Prime Minister Narendra Modi, President Emmanuel Macron of France, who was this year's chief guest, graced the occasion.

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை வரவேற்றப் பிரதமர்

January 25th, 10:56 pm

ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.

ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் ஜெய்ப்பூரில் ஜந்தர் மந்தர் சென்றார் பிரதமர்

January 25th, 10:48 pm

ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜெய்ப்பூரில் உள்ள ஜந்தர் மந்தருக்கு இன்று சென்றார்.

ஜனவரி 25 அன்று பிரதமர் புலந்த்ஷர் மற்றும் ஜெய்ப்பூர் செல்கிறார்

January 24th, 05:46 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 25 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரயில்வே, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 09:32 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 டிசம்பர் 1 அன்று துபாயில் நடைபெற்ற சர்வதேச பருநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.

பிரெஞ்சு விண்வெளி வீரரின் இந்திய வருகை குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

October 15th, 05:33 pm

பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குவெட்டின் இந்திய வருகை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15-10-2023) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா-பிரான்ஸ் கூட்டறிக்கை

September 10th, 05:26 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, செப்டம்பர் 10, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது பிரெஞ்சு குடியரசின் அதிபர் திரு இமானுவேல் மக்ரோனுடன் மதிய உணவின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் பாரிஸில் நடந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததுடன், அதுபற்றி ஆய்வு செய்தனர். முக்கியமான சர்வதேச மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.