
ஜம்மு காஷ்மீரில் ஜூன் 6 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
June 04th, 12:37 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 6 அன்று ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அப்பகுதியில் ரயில் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் செனாப் பாலத்தைத் திறந்து வைத்து, காலை 11 மணியளவில் பாலத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு, அவர் அஞ்சி பாலத்தைப் பார்வையிட்டு திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில் அவர் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, கத்ராவில் ரூ.46,000 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ஆந்திரப் பிரதேசம் அமராவதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
May 02nd, 03:45 pm
ஆந்திர ஆளுநர் திரு சையத் அப்துல் நசீர் அவர்களே, முதலமைச்சரும் எனது நண்பருமான திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, ஆற்றல் மிக்க துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களே, மாநில அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களே மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே!
ஆந்திர மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார், நிறைவடைத திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 02nd, 03:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ரூ.58,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அமராவதி என்ற புனித பூமியில் நிற்கும்போது, வெறும் ஒரு நகரத்தை மட்டுமல்ல, ஒரு புதிய அமராவதி, ஒரு புதிய ஆந்திரா என்ற கனவை நனவாக்குவதையும் தான் காண்கிறேன் என்று பிரதமர் தெரிவித்தார். அமராவதி, பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்லும் ஒரு பூமி, அதன் புத்த பாரம்பரியத்தின் அமைதியையும், வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் ஆற்றலையும் தழுவிச் செல்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டங்கள் வெறும் கான்கிரீட் கட்டமைப்புகளைப் பற்றியது மட்டுமல்ல, ஆந்திரப் பிரதேசத்தின் அபிலாஷைகள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையின் வலுவான அடித்தளமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி ஆந்திரப் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, பகவான் வீரபத்ரர், பகவான் அமரலிங்கேஸ்வரர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகியோரை பிரார்த்தனை செய்தார். முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் திரு. பவன் கல்யாண் ஆகியோருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பிரதமர் ஆற்றிய உரை
March 05th, 01:35 pm
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். மக்கள் சக்தி, பொருளாதாரம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்தல்- இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளை வரையறைக்கும் கருப்பொருளாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருப்பதை நீங்கள் காண முடியும். எனவே, இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக உருவெடுத்துள்ளது. மக்கள் சக்தி ,பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறதோ அதே அளவு முன்னுரிமை முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அளித்து வருகிறோம். திறன் மேம்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இந்தப் பிரிவுகளில் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியமாகும். அதே நேரத்தில், இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாகும்.வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் – மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
March 05th, 01:30 pm
பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற இணையவழிக் கருத்தரங்கின் கருப்பொருளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட் இந்தக் கருத்தை அதிக அளவில் பிரதிபலிக்கிறது என்றும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான திட்டமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு மற்றும் திறமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இன்றியமையாதது மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம் தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
March 03rd, 04:48 pm
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 23rd, 06:11 pm
இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
February 23rd, 04:25 pm
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.Serving the people of Andhra Pradesh is our commitment: PM Modi in Visakhapatnam
January 08th, 05:45 pm
PM Modi laid foundation stone, inaugurated development works worth over Rs. 2 lakh crore in Visakhapatnam, Andhra Pradesh. The Prime Minister emphasized that the development of Andhra Pradesh was the NDA Government's vision and serving the people of Andhra Pradesh was the Government's commitment.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
January 08th, 05:30 pm
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பகவான் சிம்ஹாசலம் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு மரியாதை செலுத்திய திரு மோடி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களின் ஆசீர்வாதத்துடன், நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆந்திராவில் அரசு அமைந்த பிறகு தாம் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நடைபெற்ற வாகனப் பேரணியின் போது தமக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்புக்காக திரு மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் ஒவ்வொரு வார்த்தையையும் மதிப்பதாக அவர் கூறினார். திரு நாயுடு தமது உரையில் கூறிய அனைத்தையும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இந்திய மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 05th, 06:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.ஜூன் 20-21 தேதிகளில் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம்
June 19th, 04:26 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் தில்லியில் மார்ச் 14 அன்று உரையாட உள்ளார்
March 13th, 07:10 pm
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மார்ச் 14 அன்று மாலை 5 மணிக்கு பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் பயனாளிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, தில்லியைச் சேர்ந்த 5,000 சாலையோர வியாபாரிகள் உட்பட 1 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது தில்லி மெட்ரோவின் 4-ம் கட்டப் பணிகளில் கூடுதலாக இரண்டு வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.மார்ச் 13 அன்று 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார் மற்றும் சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
March 12th, 03:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு 2024 மார்ச் 13 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.கூட்டுறவுத் துறையின் பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் பிப்ரவரி 24 அன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
February 22nd, 04:42 pm
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்னெடுப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 24 அன்று காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கூட்டுறவுத் துறைக்கான பல முக்கியத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.பிரதமர் பிப்ரவரி 22, 23 ஆகிய நாட்களில் குஜராத், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
February 21st, 11:41 am
பிப்ரவரி 22 அன்று காலை 10.45 மணிக்கு அகமதாபாத்தில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 12:45 மணியளவில் மெஹ்சானா சென்றடையும் பிரதமர் வாலிநாத் மகாதேவ் கோயிலில் பூஜை, தரிசனம் செய்யவுள்ளார். பிற்பகல் 1 மணியளவில், மெஹ்சானாவின் தாராப்பில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மாலை 4:15 மணியளவில், பிரதமர் நவ்சாரிக்கு செல்கிறார். சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மாலை 6.15 மணியளவில் காக்ரபார் அணுமின் நிலையத்தைப் பார்வையிடுகிறார்.பிப்ரவரி 16 அன்று பிரதமர் ரேவாரிக்கு பயணம் மேற்கொள்கிறார்
February 15th, 03:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (பிப்ரவரி 16, 2024) ஹரியானாவின் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1:15 மணியளவில், நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம், ரயில் மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான ரூ. 9750 கோடிக்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் பிப்ரவரி 16 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்
February 15th, 03:07 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ''வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்
December 01st, 12:06 pm
டேராடூனுக்குப் பயணம் செய்யவிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை 2021 டிசம்பர் 4 அன்று பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்த மண்டலத்தில் சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் பயணத்தை மாற்றுவதற்கும், சுற்றுலாவை அதிகரிப்பதற்கும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பற்றியதாக இந்த பயணத்தின் நோக்கம் இருக்கும். ஒருகாலத்தில் மிகவும் தொலைதூரத்தில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு எளிதாகப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலானதாக இது இருக்கும்.