அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, பூமியின் நிலையான சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
November 16th, 09:56 pm
மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரக்கன்று நட்டு, பூமியின் நிலையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ரஷ்ய அரசுமுறைப் பயணத்தின் பயன்கள்
July 09th, 09:59 pm
2024 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பு திட்டம், ரஷ்ய கூட்டமைப்பின் ஆர்டிக் மண்டலத்தில் ஒத்துழைப்பு கோட்பாடுகள்PM reviews preparedness for heat wave related situation
April 11th, 09:19 pm
Prime Minister Shri Narendra Modi chaired a meeting to review preparedness for the ensuing heat wave season.இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
February 29th, 09:35 pm
இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிறுத்தைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 11:00 am
சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
July 04th, 10:36 am
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் காரணமாக தாம் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீ சத்ய சாயியின் அருளாசியும், உத்வேகங்களும் இன்று நம்முடன் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் நாடு புதிய மாநாட்டு மையத்தைப் பெற்றுள்ளதாக கூறி தமது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். புதிய மையம் ஆன்மீக அனுபவத்தையும் நவீனத்துவத்தின் சிறப்பையும் உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மையம் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கருத்தியல் மகத்துவத்தை உள்ளடக்கியது என்றும், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஒன்றுகூடும் ஆன்மீகம் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்த விவாதங்களுக்கு இது ஒரு மையப் புள்ளியாக மாறும் என்றும் அவர் கூறினார்.பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பிரதமர் பார்வையிட்டார்
April 09th, 02:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களை பார்வையிட்டார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்ற அவர், அங்குள்ள யானை பாகர்கள் மற்றும் பாதுகாவலர்களுடன் கலந்துரையாடினார். முகாமில் யானைகளுக்கு உணவளித்தார். ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானைக் காவலர்களுடனும் பிரதமர் உரையாடினார்.மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்ட 50-ம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
April 09th, 01:00 pm
இங்கு தாமதமாக வந்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். காலையில் 6 மணியளவில் நான் புறப்பட்டேன். வனப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சரியான நேரத்தில் இங்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன். உங்கள் அனைவரையும் காத்திருக்க வைத்தது குறித்து வருந்துகிறேன்.கர்நாடகாவின் மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்
April 09th, 12:37 pm
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். ”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருப்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
March 29th, 04:27 pm
2022 செப்டம்பர் 17 அன்று வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றிருப்பது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.என்பிடிபிஆர் & சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்-2023-னின் 3-வது கூட்டத்தில் பிரதமரின் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
March 10th, 09:43 pm
முதலாவதாக, பேரிடர் மீட்புப்படை மற்றும் பேரிடர் மேலாண்மையில் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஏனென்றால், பல நேரங்களில் உங்கள் சொந்த உயிரைக் கூட பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் அற்புதமான வேலையைச் செய்கிறீர்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது இரு மாநில படைகளுக்கு இன்று வழங்கப்பட்டது. புயல், சுனாமி போன்ற பல்வேறு பேரிடர்களின் போது ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதேபோல், மிசோரமின் லுங்கிலி தீயணைப்பு நிலையம் காட்டுத் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் அயராது உழைத்தது.பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 10th, 04:40 pm
பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த 3-வது நிகழ்வின் முக்கிய கருப்பொருள் மாறிவரும் பருவநிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல் ஆகும்.India is a rapidly developing economy and continuously strengthening its ecology: PM Modi
September 23rd, 04:26 pm
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.PM inaugurates the National Conference of Environment Ministers of all States in Ekta Nagar, Gujarat
September 23rd, 09:59 am
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.குணோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் விடுவிக்கப்பட்ட விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 17th, 11:51 am
கடந்த கால தவறுகளை சரி செய்து புதிய எதிர்காலத்தைக் கட்டமைககும் வாய்ப்புகளை மனித குலம் வழங்கியிருக்கிறது. அத்தகைய தருணம் இன்று நம்முன் வந்திருக்கிறது. பல தசாப்தங்களுக்கு முன், தொன்மையான பல்லுயிர் பெருக்கத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அழிந்து போய்விட்டது. அதனை மீட்பதற்கு நாம் ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறோம். சிறுத்தை இன்று இந்திய மண்ணுக்குத் திரும்பியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தருணம், இயற்கையை நேசிக்கும் இந்தியாவின் மன உணர்வை முழு ஆற்றலுடன் வெளிப்படுத்தியுள்ளது. பல பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணுக்கு சிறுத்தைகள் திரும்பவும் வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நமீபியாவையும் அதன் அரசையும் பாராட்டுகிறேன். இந்தச் சிறுத்தைகள் இயற்கை மீதான நமது பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வாக மட்டுமின்றி, மனித மாண்புகள் மற்றும் பாரம்பரியங்கள் குறித்த விழிப்புணர்வாகவும் மாறி இருக்கிறது.PM addresses the nation on release of wild Cheetahs in Kuno National Park in Madhya Pradesh
September 17th, 11:50 am
PM Modi released wild Cheetahs brought from Namibia at Kuno National Park under Project Cheetah, the world's first inter-continental large wild carnivore translocation project. PM Modi said that the cheetahs will help restore the grassland eco-system as well as improve the biopersity. The PM also made special mention of Namibia and its government with whose cooperation, the cheetahs have returned to Indian soil after decades.வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
May 05th, 08:09 pm
வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
February 14th, 10:39 am
பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
January 30th, 11:30 am
நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
June 05th, 11:05 am
பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகமும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுதல் அமைச்சகமும் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வில் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் போது பூனாவில் இருந்து கலந்து கொண்ட விவசாயி ஒருவரிடம் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது அந்த விவசாயி இயற்கை முறை விவசாயம் மற்றும் வேளாண்மையில் உயிரி எரிபொருளின் பயன்பாடு குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.