இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

November 21st, 02:15 am

எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு

November 21st, 02:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

June 14th, 04:00 pm

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.06.2024) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்துத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

March 22nd, 03:39 pm

திம்புவில் உள்ள டெண்ட்ரெல்தாங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பூடானின் மிக உயரிய விருதான ட்ருக் கியால்போ (Druk Gyalpo) விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பூடான் மன்னர் வழங்கினார். இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.

ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு

May 24th, 06:41 am

எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.

ஜூன் 23 அன்று வணிக பவனை தொடங்கிவைக்கும் பிரதமர், வருடாந்தர வணிகப் பகுப்பாய்வுக்கான தேசிய இறக்குமதி-ஏற்றுமதி ஆவணம் எனும் இணைய பக்கத்தையும் தொடங்கிவைப்பார்

June 22nd, 03:55 pm

2022, ஜூன் 23 காலை 10.30 மணிக்கு தொழில் வர்த்தக புதிய வளாகத்தில் வணிக (வாணிஜ்ய) பவனை பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த நிகழ்ச்சியில் வருடாந்தர வணிகப் பகுப்பாய்வுக்கான தேசிய இறக்குமதி-ஏற்றுமதி ஆவணம் எனும் இணைய பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாக தேவைப்படும் அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே இடத்தில் அறிந்துகொள்வதற்காக இந்த இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடியிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.

Finalisation of the BRICS Counter Terrorism Strategy an important achievement: PM

November 17th, 05:03 pm

In his intervention during the BRICS virtual summit, PM Narendra Modi expressed his contentment about the finalisation of the BRICS Counter Terrorism Strategy. He said it is an important achievement and suggested that NSAs of BRICS member countries discuss a Counter Terrorism Action Plan.

12-வது பிரிக்ஸ் மெய்நிகர் உச்சிமாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க கருத்துரை

November 17th, 05:02 pm

தலைவர்களே, இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்- ‘’உலக ஸ்திரத்தன்மைக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி’’, பொருத்தமானது மட்டுமல்லாமல், தொலை நோக்கு கொண்டது. குறிப்பிடத்தக்க புவி-மூலோபாய மாற்றங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அவை, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மூன்று அம்சங்களிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 03rd, 06:17 pm

ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபர் மதிப்பிற்குரிய ஜோகோ விடோடோவை பாங்காக் நகரில் 2019 நவம்பர் 3 ஆம் தேதி சந்தித்தார்.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 03rd, 06:07 pm

ஆசியான் அமைப்பின் 35வது உச்சி மாநாடு, 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 16வது இந்திய- ஆசியான் அமைப்பின் உச்சிமாநாடு ஆகிய நிகழ்வுகளுக்கு இடையே தாய்லாந்து பிரதமர் ஜெனரல் (ஓய்வு) பிராயுத் சான் ஓ சா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 நவம்பர் 3 அன்று சந்தித்தார்.

ஐ நா பொதுச்சபையின் 74-ஆவது அமர்வுக்கு இடையே பிரதமர், பெல்ஜியம் பிரதமரை சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு

September 26th, 09:35 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூயார்க்கில் பெல்ஜியம் பிரதமர் திரு சார்லஸ் மைக்கேலை செப்டம்பர் 25-ஆம் தேதி ஐ நா பொதுச்சபையின் 74-ஆவது அமர்வில் உயர்மட்டப் பிரிவு கூட்டத்திற்கு இடையே சந்தித்தார்.

தென்னாப்பிரிக்க அதிபரின் இந்தியப் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

January 25th, 01:00 pm

இந்தியாவின் ஒருங்கிணைந்த நண்பரான அதிபர் ரமஃபோசா இன்று நம்மிடையே வருகை புரிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் விஷயமாகும். இந்தியா அவருக்குப் புதியதல்ல. ஆனால், அதிபராக அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அவரது இந்திய வருகை நமது உறவுகளில் சிறப்பான தருணமாக உள்ளது. இந்த ஆண்டு மகாத்மாகாந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த ஆண்டுவிழா. நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. அதுமட்டுமின்றி, சென்ற ஆண்டு இருதரப்பு தூதரக உறவுகள் ஏற்பட்ட வெள்ளி விழா ஆண்டாகும். இத்தகைய சிறந்த தருணத்தில் அதிபர் ரமஃபோசா இந்தியா வந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகை நமக்குத் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் குடியரசு தின விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த மதிப்பையும், பெருமையையும் நமக்கு அளித்த அவருக்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த சிறப்பை நமக்கு அளித்த அவருக்கு இந்தியா முழுவதும் நன்றி செலுத்துகிறது.

மொராக்கோ நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமிகு. ராகியா எட்டர்ஹாம் பிரதமருடன் சந்திப்பு

January 17th, 11:33 pm

மொராக்கோ நாட்டின் தொழில்துறை, முதலீடு, வர்த்தகம் மற்றும் இணைய பொருளாதாரத் துறையின் வெளியுறவு அமைச்சர் திருமிகு. ராகியா எட்டர்ஹாம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை (டிசம்பர் 17, 2018)

December 17th, 04:32 pm

இந்திய பிரதமர் மேதகு திரு.நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில், மாலத்தீவு குடியரசின் அதிபர் மேதகு திரு.இப்ராகிம் முகம்மது சோலி, இந்தியாவுக்கு டிசம்பர் 16-18, 2018-ல் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

குடியரசுத் தலைவரின் மாலத்தீவு பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் பட்டியல்

December 17th, 04:21 pm

குடியரசுத் தலைவரின் மாலத்தீவு பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் பட்டியல்

PM Modi’s remarks at joint press meet with President Ibrahim Solih of Maldives

December 17th, 12:42 pm

At the joint press meet with President Ibrahim Solih, PM Modi reiterated India’s commitment to strengthen ties with Malpes. The PM said that India will provide economic assistance worth $1.4 billion to Malpes in the form of budgetary support, currency swap and concessional lines of credit.

Congress divides, BJP unites: PM Modi

October 10th, 05:44 pm

Prime Minister Narendra Modi today interacted with BJP booth Karyakartas from five Lok Sabha seats - Raipur, Mysore, Damoh, Karauli-Dholpur and Agra. During the interaction, PM Modi said that BJP was a 'party with a difference'. He said that the BJP was a cadre-driven party whose identity was not limited to a single family or clan.

பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் நமோ செயலி வழியாக கலந்துரையாடுகிறார்

October 10th, 05:40 pm

அஜ்மீர் மாநாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டு வங்கி அரசியலையும், மக்களை பிரிக்கும் செயலையும் காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று பிரதமர் மோடி இன்று குற்றம்சாற்றியுள்ளார். ஓட்டு வங்கி அரசியல்படி பட்ஜெட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

ரஷிய அதிபரின் இந்தியப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட அறிக்கை

October 05th, 02:45 pm

புது தில்லியில் இரு தரப்பு உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷியக் கூட்டமைப்பின் அதிபர் திரு. விளாதிமீர் புதினும் சந்தித்துப் பேசினர். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, இந்திய அரசுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் ஏற்பட்ட நிரந்தர உடன்பாடு, நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்திய – ரஷிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு ஒத்துழைப்பு, ராஜீய கூட்டாண்மை அமைந்த கூட்டாண்மை மேம்பாட்டுக்கும் சிறப்பு ராஜதந்திர கூட்டறிக்கை ஆகியவற்றின் அடிப்படியலும் வலுவாக அமைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது அரசியல், ராஜீய உறவு, ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார, எரிசக்தி, தொழில், அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மனிதநேய உறவுகள் எனப் பல வகையிலும் அமைந்தது.

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

June 26th, 10:50 am

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.