ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.இந்தியா மற்றும் மாலத்தீவுகள்: விரிவான பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு பார்வை
October 07th, 02:39 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு ஆகியோர், 2024 அக்டோபர் 7 அன்று சந்தித்து, இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் விரிவாக மதிப்பாய்வு செய்தனர், அதே நேரத்தில், இரு நாடுகளின் மக்களின் மேம்பாட்டிற்கு பெரிதும் பங்களித்த வரலாற்று ரீதியாக நெருக்கமான மற்றும் சிறப்பு உறவை ஆழப்படுத்துவதில் இரு நாடுகளும் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்டனர்.மாலத்தீவு அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பின் தமிழாக்கம் (அக்டோபர் 7, 2024)
October 07th, 12:25 pm
இந்தியாவும், மாலத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.2023 தொகுப்பைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி பயிற்சி அதிகாரிகள் பிரதமரை சந்தித்தனர்
August 29th, 06:35 pm
பிரதமரின் தலைமையின் கீழ், வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியைப் பாராட்டிய பயிற்சி அதிகாரிகள், எதிர்வரும் புதிய பணிகள் குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கேட்டறிந்தனர். நாட்டின் கலாச்சாரத்தை எப்போதும் தங்களுடன் பெருமிதத்துடனும், கண்ணியத்துடனும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும் அதை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட நடத்தை உட்பட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் காலனித்துவ மனநிலையை வென்று, அதற்கு பதிலாக நாட்டின் பெருமைமிக்க பிரதிநிதிகளாக தங்களை முன்னெடுத்துச் செல்வது பற்றி அவர் பேசினார்.போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
August 21st, 09:07 am
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
August 11th, 08:17 am
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:29 pm
2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் கஜகஸ்தான் இருந்தபோது உறுப்பினராக சேர்க்கப்பட்டதை இந்தியா பாராட்டுதலுடன் நினைவு கூர்கிறது. அதிலிருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு சுற்று தலைமைப் பொறுப்புகளை நாம் நிறைவு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டில் அரசுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும், 2023-ம் ஆண்டில் நாட்டுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது. எங்களது வெளியுறவுக் கொள்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
July 04th, 01:25 pm
உச்சிமாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் உரையை வாசித்தார்.For the first time in the country, the poor have got security as well as dignity: PM Modi
April 26th, 08:01 pm
PM Modi addressed the Republic Summit. The country realized that India’s moment is now here, said PM Modi. Throwing light on this year’s theme ‘Time of Transformation’, PM Modi said that citizens can now witness the transformation on the ground which was envisioned 4 years earlier.புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
April 26th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.2022 மிகவும் ஊக்கமளிக்கிறது, அற்புதமானது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 25th, 11:00 am
நண்பர்களே, இவை அனைத்துடன் கூடவே 2022ஆம் ஆண்டு, மேலும் ஒரு காரணத்திற்காக நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். அது என்னவென்றால், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் விரிவாக்கம் தான் அது. நாட்டுமக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கொண்டாடும் விதமாக அற்புதமான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. குஜராத்தின் மாதவ்புரின் திருவிழாவிலே ருக்மணி திருக்கல்யாணம், பகவான் கிருஷ்ணரின் வடகிழக்குடனான தொடர்புகள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன; அல்லது காசி-தமிழ் சங்கமம் ஆகட்டும், இந்தக் காலங்களில் ஒற்றுமையின் பல வண்ணங்கள் தென்பட்டன. 2022ஆம் ஆண்டிலே நாட்டுமக்கள் மேலும் ஒரு அமர இதிஹாசத்தை எழுதினார்கள். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வீடுதோறும் மூவண்ணம் இயக்கத்தை யாரால் மறந்து விட முடியும்!! அந்த ஒப்பற்ற கணங்களிலே நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் சிலிர்ப்பை உணர்ந்தார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த இயக்கம் நாடு முழுவதையும் மூவண்ணத்தால் நிரப்பியது. 6 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக்கொடியோடு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து அனுப்பினார்கள். சுதந்திரத்தின் இந்த அமுதப் பெருவிழாவிலே அடுத்த ஆண்டும் இதே போலவே நடக்கும் – அமுதகாலத்தின் அடித்தளத்தை இது மேலும் பலமுடையதாக ஆக்கும்.இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்
November 22nd, 07:05 pm
இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பேன்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.ஜப்பான் பிரதமருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
September 27th, 12:57 pm
துயரமான இந்த நேரத்தில் நாம் இன்று சந்திக்கிறோம். இன்று ஜப்பானுக்கு வந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனெனில், கடந்த முறை நான் ஜப்பான் வந்தபோது திரு.ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நான் இங்கிருந்து சென்ற பிறகு இப்படியொரு செய்தியை கேட்க நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.புதுதில்லியில் கடமைப்பாதையின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 08th, 10:41 pm
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் எனது அமைச்சரவை நண்பர்களான திரு ஹர்தீப் சிங் புரி, திரு ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேகவால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் திரு கௌசல் கிஷோர் ஆகியோர் இந்த மேடையில் உள்ளனர்.PM inaugurates 'Kartavya Path' and unveils the statue of Netaji Subhas Chandra Bose at India Gate
September 08th, 07:00 pm
PM Modi inaugurated Kartavya Path and unveiled the statue of Netaji Subhas Chandra Bose. Kingsway i.e. Rajpath, the symbol of colonialism, has become a matter of history from today and has been erased forever. Today a new history has been created in the form of Kartavya Path, he said.ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
May 24th, 06:59 pm
ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா இரவு விருந்து வழங்கினார்.அமெரிக்க அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை
May 24th, 05:29 pm
திரு அதிபர் அவர்களே, உங்களை சந்திப்பதில் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் மற்றொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் ஒன்றாக பங்கேற்றோம்.இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (இந்த்ஆஸ் எக்டா) காணோலி கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
April 02nd, 10:01 am
எனது நண்பர் ஸ்காட் உடன் ஒரு மாதத்தில் எனது மூன்றாவது நேருக்கு நேர் உரையாடல் இதுவாகும். கடந்த வாரம் நடைபெற்ற காணொலி உச்சி மாநாட்டில் மிகவும் பயனுள்ள விவாதத்தை நாங்கள் நடத்தினோம். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு எங்கள் குழுக்களுக்கு அப்போது அறிவுறுத்தியிருந்தோம். இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அசாதாரண சாதனைக்காக, இரு நாட்டு வர்த்தக அமைச்சர்கள் மற்றும் அவர்களது அதிகாரிகளை மனதார வாழ்த்துகிறேன்.எல்பிஎஸ்என்ஏஏ-வில் 96-வது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
March 17th, 12:07 pm
அடிப்படை பயிற்சி வகுப்பை நிறைவு செய்யும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இன்று ஹோலிப் பண்டிகை நாளாகும். உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த கல்வி நிறுவனத்தினருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கும், லால்பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல் சான்றிதழ்கள் உங்கள் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டதற்கும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய விளையாட்டுக்கள் வளாகமும், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை உங்களின் அணி உணர்வை, சுகாதாரத்தை, உடல் தகுதியை வலுப்படுத்தும். மேலும் குடிமைப்பணி சேவையை மேலும் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.எல்பிஎஸ்என்ஏஏ-வின் 96 ஆவது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
March 17th, 12:00 pm
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக் கழகத்தின் (எல்பிஎஸ்என்ஏஏ-வின்) 96 ஆவது பொதுவான அடிப்படை பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய விளையாட்டுக்கள் வளாகத்தையும் தொடங்கி வைத்த அவர், புனரமைக்கப்பட்ட ஹாப்பி வேலி வளாகத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.