சுரினாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 10:57 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, சுரினாம் அதிபர் மேதகு திரு. சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை
November 21st, 04:23 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்
November 18th, 11:52 pm
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா தனது வெற்றிகளின் அடிப்படையில் முன்னேறும் என்றும், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக தனது கூட்டு வலிமையையும், ஆதாரங்களையும் பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்."சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 18th, 08:00 pm
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 07:55 pm
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 03:25 pm
இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
October 23rd, 03:10 pm
கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.நீடித்த வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் திட்டம் மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைய கிரிஷோன்னதி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 03rd, 09:18 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு பொறுப்பேற்கும் அனைத்து திட்டங்களையும் பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் திட்டம், உணவு விடுதி திட்டம் மற்றும் கிரிஷோன்னதி திட்டம் ஆகிய இரண்டு குடை திட்டங்களாக சீரமைப்பதற்கான வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் திட்டம் நீடித்த வேளாண்மையை ஊக்குவிக்கும். அதே நேரத்தில் கிரிஷோன்னதி திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவு குறித்து பேசும். பல்வேறு கூறுகளின் திறமையான மற்றும் திறம்பட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய அனைத்து கூறுகளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்.Success of Humanity lies in our collective strength, not in the battlefield: PM Modi at UN Summit
September 23rd, 09:32 pm
Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.Prime Minister’s Address at the ‘Summit of the Future’
September 23rd, 09:12 pm
Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
August 23rd, 06:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் இன்று (23.08.2024) சந்தித்தார். மரின்ஸ்கி அரண்மனைக்கு வந்த பிரதமரை அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.The Voice of Global South Summit is a platform where we amplify the needs and aspirations of those often unheard: PM Modi
August 17th, 10:00 am
Prime Minister Narendra Modi, during his opening remarks at the 2024 Voice of Global South Summit, emphasized India's commitment to inclusive development, global cooperation, and addressing challenges like climate change, health security, and technological pides. He highlighted India's role in amplifying the voices of Global South nations within the G20 and shared initiatives to enhance digital infrastructure and healthcare partnerships across the Global South.India has a robust system of agriculture education and research based on its heritage : PM Modi
August 03rd, 09:35 am
Prime Minister Narendra Modi inaugurated the 32nd International Conference of Agricultural Economists, emphasizing the need for global cooperation in agriculture and the importance of sustainable farming practices. The PM also highlighted India's efforts in digital agriculture, water conservation, and soil health management.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
August 03rd, 09:30 am
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம் என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை ஆகஸ்ட் 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
August 02nd, 12:17 pm
புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3, 2024 அன்று காலை 9.30 மணியளவில் வேளாண் பொருளாதார வல்லுநர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார்.வியட்நாம் பிரதமரின் இந்திய பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் மொழிபெயர்ப்பு
August 01st, 12:30 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் பாம் மின் சின் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.ரிபப்ளிக் உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் உரை
March 07th, 08:50 pm
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2024-ல் அடுத்த தசாப்தத்தில் பாரதம் என்ற கருப்பொருளில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.