கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.Prime Minister Narendra Modi meets with Prime Minister of Lao PDR
October 11th, 12:32 pm
Prime Minister Narendra Modi held bilateral talks with Prime Minister of Lao PDR H.E. Mr. Sonexay Siphandone in Vientiane. They discussed various areas of bilateral cooperation such as development partnership, capacity building, disaster management, renewable energy, heritage restoration, economic ties, defence collaboration, and people-to-people ties.Cabinet approves Flood Management and Border Areas Programme (FMBAP) for the period 2021-26
February 21st, 11:36 pm
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved the proposal of Department of Water Resources, RD & GR for continuation of centrally sponsored Scheme, viz., “Flood Management and Border Areas Programme (FMBAP)” with total outlay of Rs. 4,100 crore for a period of 5 years from 2021-22 to 2025-26 (15th Finance Commission period).திருச்சிராப்பள்ளியில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 02nd, 12:30 pm
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களே, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களே, எனது அமைச்சரவை சகா ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த மண்ணின் மைந்தர் எல்.முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களே, எனது தமிழக குடும்ப உறுப்பினர்களே!திருச்சிராப்பள்ளியில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
January 02nd, 12:15 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் துறை போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுகிறது: பிரதமர்
June 23rd, 09:15 pm
அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
May 05th, 08:09 pm
வெப்ப அலை மேலாண்மை மற்றும் பருவமழை தயார்நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
February 14th, 10:39 am
பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
January 23rd, 05:24 pm
Prime Minister Narendra Modi paid tribute to Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary. Addressing the gathering, he said, The grand statue of Netaji, who had established the first independent government on the soil of India, and who gave us the confidence of achieving a sovereign and strong India, is being installed in digital form near India Gate. Soon this hologram statue will be replaced by a granite statue.நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திறந்து வைத்தார்
January 23rd, 05:23 pm
நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜியின் உருவச்சிலைப் பணிகள் நிறைவடையும் வரை மின்னொளி வடிவிலான இந்தச் சிலை இங்கு வைக்கப்பட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஓராண்டு நடைபெற உள்ள நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.நவம்பர் 5-ம் தேதி கேதார்நாத் செல்லும் பிரதமர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைக்கிறார்
October 28th, 06:17 pm
கேதார்நாத் கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்யவுள்ளார். அதன் பிறகு, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைக்கவுள்ள பிரதமர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் திறந்து வைக்கிறார். 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னர் சமாதி புனரமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்த பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் முழு புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் குறித்து மாநில முதல்வரிடம் பிரதமர் பேச்சு
August 31st, 10:52 am
அசாம் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிதியுதவியை அறிவித்தார்
August 04th, 08:31 pm
மேற்கு வங்கத்தில் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவிக்கு பிரதமர் ஒப்புதல்
August 04th, 08:29 pm
மத்தியப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவிக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார் .மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வருடன் பிரதமர் பேச்சு
August 04th, 01:27 pm
மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் அணைகளிலிருந்து தண்ணீர் வடிந்ததால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் திருமிகு மம்தா பானர்ஜியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியுள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருகிறது: பிரதமர்
August 04th, 01:23 pm
மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கு மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகானுடன் பிரதமர் பேசி, அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நேர்மறை மற்றும் உணர்வுத்திறம் கொண்டது. இது ஒரு கூட்டு தன்மையைக் கொண்டுள்ளது: பிரதமர் மோடி
July 25th, 09:44 am
நண்பர்களே, தேசத்தின் பொருட்டு மூவண்ணக் கொடியினை யார் உயர்த்துகிறார்களோ, அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் நமது உணர்வுகள் பெருகுவது என்பது இயல்பான ஒன்று. தேசபக்தியின் இந்த உணர்வு தான் நம்மனைவரையும் இணைக்கிறது. நாளை, ஜூலை மாதம் 26ஆம் தேதியன்று கார்கில் விஜய் திவஸும் கூட. பாரதப் படையின் வீரம், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடையாளம்கார்க்கில் யுத்தம். உலகம் முழுமையும் இதைக் கண்டிருக்கிறது. இந்த முறை, இந்த கௌரவம் நிறைந்த நாளும், அம்ருத மஹோத்ஸவத்திற்கிடையே கொண்டாடப்பட இருக்கிறது. ஆகையால் இது மேலும் சிறப்புத்தன்மை வாய்ந்தததாக ஆகின்றது. சிலிர்ப்பை ஏற்படுத்தும் கார்கிலின் வீரதீரச் சம்பவங்களை நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும், கார்கில் போரின் வீரர்களை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.மகாராஷ்டிராவில் வெள்ள நிலவரம் குறித்து முதல்வருடன் பிரதமர் பேசினார்
July 22nd, 09:59 pm
பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து கர்நாடக முதல்வருடன் பிரதமர் பேச்சு
October 16th, 09:07 pm
கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து, மாநில முதல்வர் திரு. எடியூரப்பாவிடம், பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசினார்.