குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 21st, 06:34 pm
நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன்.குவைத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
December 21st, 06:30 pm
குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 09:37 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. கேஸ்டன் பிரவுனை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார்.டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை
October 10th, 05:42 pm
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.3-வது கவுடில்யா பொருளாதார மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
October 04th, 07:45 pm
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்.கே.சிங் அவர்களே, இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள இதர சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே! இது கௌடில்யர் மாநாட்டின் மூன்றாவது பதிப்பாகும். உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பல அமர்வுகள் இங்கு நடைபெறும். இந்த விவாதங்கள் இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 04th, 07:44 pm
புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 02nd, 10:15 am
இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
October 02nd, 10:10 am
தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'புருனே சுல்தான் அளித்த விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 04th, 12:32 pm
எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் புருனே சுல்தானுக்கும், ஒட்டுமொத்த அரச குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும். இங்கு எனக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும், நமது இருநாடுகளுக்கு இடையேயான நூற்றாண்டுகள் பழமையான உறவுகளை எனக்கு நினைவுபடுத்துகின்றன.India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai
August 30th, 12:00 pm
PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.மகாராஷ்டிராவின், மும்பையில், உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழா 2024-ல் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
August 30th, 11:15 am
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நிதித் தொழில்நுட்ப திருவிழா(GFF) 2024-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். நிதித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, இத்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்திய பணப்பட்டுவாடா கவுன்சில், இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப சங்கம கவுன்சில் ஆகியவை, இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிற்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.பிரதமர் மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 30 அன்று பயணம் மேற்கொள்கிறார்
August 29th, 04:47 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஆகஸ்ட் 30 அன்று, மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் பால்கரில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் உலகளாவிய ஃபின்டெக் 2024 விழாவில் பிரதமர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிற்பகல் 1.30 மணியளவில், பால்கரில் உள்ள சிட்கோ மைதானத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)
August 22nd, 08:22 pm
2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:"உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுதல்" தொடர்பாக இந்தியா-போலந்து கூட்டறிக்கை
August 22nd, 08:21 pm
போலந்து பிரதமர் திரு. டொனால்ட் டஸ்க்கின் அழைப்பின் பேரில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 21 முதல் 22 வரை போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த வரலாற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 22nd, 06:10 pm
இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 03:00 pm
வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய– மலேசிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை
August 20th, 08:39 pm
ஆகஸ்ட் 20, 2024 அன்று, மலேசியப் பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தெற்காசிய பிராந்தியத்திற்கு மலேசிய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் இரு பிரதமர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இந்திய-மலேசிய உறவுகளை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் பல துறைகளை இந்த விரிவான விவாதங்கள் உள்ளடக்கியிருந்தது.முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்
August 20th, 04:49 pm
தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் குறித்து இந்திய அரசு மற்றும் மலேசிய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
August 20th, 12:00 pm
பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.Congress has always been an anti-middle-class party: PM Modi in Hyderabad
May 10th, 04:00 pm
Addressing his second public meeting, PM Modi highlighted the significance of Hyderabad and the determination of the people of Telangana to choose BJP over other political parties. Hyderabad is special indeed. This venue is even more special, said PM Modi, reminiscing about the pivotal role the city played in igniting hope and change a decade ago.