ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
December 14th, 11:17 am
புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
June 10th, 11:44 am
திரைப்பட இயக்குநர், சிந்தனையாளர் மற்றும் கவிஞரான திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.