PM Modi extends warm greetings on occasion of Kartik Purnima and Dev Deepawali

November 15th, 04:55 pm

The Prime Minister Shri Narendra Modi today greeted the nation on occasion of Kartik Purnima and Dev Deepawali.

PM Modi extends warm greetings on the occasion of Sri Guru Nanak Jayanti

November 15th, 08:44 am

Prime Minister Shri Narendra Modi today extended warm greetings on the occasion of Sri Guru Nanak Jayanti. He remarked that the teachings of Sri Guru Nanak Dev Ji inspire us to further the spirit of compassion, kindness and humility.

வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

November 12th, 07:05 am

இகாஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக சேர்த்து முன்னேற இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக உத்தராகண்ட் மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேவபூமியின் இகாஸ் திருவிழா பாரம்பரியம் மேலும் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மஹாபர்வ் சாத் சடங்குகள், குடிமக்களை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் பலப்படுத்துகின்றன: பிரதமர்

November 08th, 08:40 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சாத் பூஜையின் காலை பிரார்த்தனை என்னும் புனிதமான நாளில் குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் மஹாபர்வ் சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகள் குடிமக்களுக்கு புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சத் பண்டிகையின் சந்தியா அர்க்யாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து

November 07th, 03:20 pm

சத் பண்டிகையின் சந்தியா அர்க்யா (மாலை பிரார்த்தனை) பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாத் பூஜையின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து

November 05th, 03:35 pm

சாத் பூஜையின் முதல் நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

November 03rd, 09:53 am

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

October 31st, 10:46 pm

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்

October 31st, 10:46 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 31st, 07:05 pm

நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.

October 31st, 07:00 pm

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 31st, 07:32 am

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அற்புதமானது, ஒப்பற்றது, கற்பனை செய்ய முடியாதது! பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவத்திற்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்துகள்: பிரதமர்

October 30th, 10:45 pm

பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவ கொண்டாட்டங்களையொட்டி அயோத்தி மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

October 30th, 09:39 pm

தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேதகு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, பாங்காக்கில் குட்டி இந்தியாவில் உள்ள பஹுரத்தில் அற்புதமான தாய்லாந்து தீபாவளி விழா 2024-ஐ இன்று தொடங்கி வைத்தார். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 29th, 01:28 pm

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!

சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

October 29th, 01:00 pm

தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரை

October 29th, 11:00 am

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தேசத்தின் இளம் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 29th, 10:30 am

வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.

தந்தேராஸ் விழாவையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 29th, 09:34 am

தந்தேராஸ் விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,