துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2020 ல் இந்திய அரங்கில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை
October 01st, 08:55 pm
துபாயில் நடைபெறும் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்திய பெவிலியனுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சி ஆகும். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாகும். இந்தியா இந்த கண்காட்சியில் மிகப்பெரிய அரங்குடன் பங்கேற்கிறது. எதிர்காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாயுடனான நமது ஆழ்ந்த வரலாற்று உறவுகளை மேம்படுத்துவதில் இந்த கண்காட்சி பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளர் மரியாதைக்குரிய ஷேக் கலீபா பின் சயீத் பின் அல் நஹ்யானுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எக்ஸ்போ 2020 துபாயில் உள்ள இந்திய அரங்கிற்கு பிரதமரின் செய்தி
October 01st, 08:54 pm
எக்ஸ்போ 2020 துபாயில் உள்ள இந்திய அரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனுப்பி உள்ள செய்தியில் இந்த எக்ஸ்போவை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டு உள்ளார். இது ”மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் முதல் எக்ஸ்போ ஆகும். யுஏஇ மற்றும் துபாய் ஆகியவற்றுடன் நமது நெருக்கமான மற்றும் வரலாற்று உறவுகளை நெடுங்காலத்திற்கு வலுப்படுத்திக் கொள்ள இந்த எக்ஸ்போ உதவும் என்று நான் நம்புகிறேன்” என பிரதமர் கூறி உள்ளார். யுஏஇ-ன் தலைவர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளரான மாட்சிமை பொருந்திய ஷேக் காலிஃபா பின் சயீத் பின் அல் நகியான் மற்றும் யுஏஇ-ன் துணைத் தலைவர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான மாட்சிமை பொருந்திய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ஆகியோருக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். நமது ராஜாங்க உறவில் வளர்ச்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அபுதாபியின் பட்டத்து இளவரசரான மாட்சிமை பொருந்திய ஷேக் முகமது பின் சயீத் அல் நகியானுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததோடு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் நமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யான் இடையே தொலைபேசி உரையாடல்
September 03rd, 10:27 pm
அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யான் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிற்பகல் தொலைப்பேசி மூலம் உரையாடினார்.