இந்திய விண்வெளி சங்கத்தின் துவக்க விழாவில் பிரதமரின் உரையின் மொழிபெயர்ப்பு
October 11th, 11:19 am
நாட்டின் இரண்டு தவப்புதல்வர்களான பாரத ரத்னா திரு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் பாரத ரத்னா ஸ்ரீ நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு பெரிய ஆளுமைகளும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகித்தனர். அனைவரையும் அரவணைத்து செல்வதன் மூலமும் ஒவ்வொருவரின் முயற்சியின் மூலமும் தேசத்தில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நம்மை ஊக்குவிக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் மற்றும் நானாஜி தேஷ்முக் அவர்கள் ஆகியோரை வணங்கி எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.இந்திய விண்வெளி சங்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 11th, 11:18 am
இந்திய விண்வெளி சங்கத்தை (இஸ்பா) பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21-வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
September 17th, 12:22 pm
முதலில், எஸ்சிஓ அமைப்பின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளதற்காக அதிபர் ரஹ்மோனுக்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சவாலான உலகளாவிய மற்றும் பிராந்திய சூழலில் கூட இந்த அமைப்பை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். நடப்பாண்டில், தஜிகிஸ்தான் 30 வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், இந்திய மக்கள் சார்பாக தஜிகிஸ்தான் சகோதர சகோதரிகளுக்கும், அதிபர் ரஹ்மோனுக்கும் எனது வாழ்த்துக்கள்.உத்தரப்பிரதேசத்தில் ‘பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ பயனாளிகளுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் தமிழ் மொழியாக்கம்
August 05th, 01:01 pm
இன்று உங்களுடன் பேசுவது எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு உணவு தானியமும் ஒவ்வொரு பயனாளியின் தட்டையும் சென்றடைகிறது. முந்தைய அரசுகளின் காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளுக்கான உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலை இப்போது இல்லை. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா உ.பி.யில் செயல்படுத்தப்படும் விதம், புதிய உத்தரபிரதேசத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது. நான் நீங்கள் பேசுவதை மிகவும் ரசித்தேன், உங்கள் தைரியமும் நம்பிக்கையும் திருப்தி அளிக்கிறது, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருந்தது. உங்களுக்காக பணிபுரிய இவை எனக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்
August 05th, 01:00 pm
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.இ-ருப்பி மின்னணு கட்டண தீர்வின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
August 02nd, 04:52 pm
இந்த முக்கிய நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்டிருக்கும் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சரவையைச் சேர்ந்த எனது சக நண்பர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், வெவ்வேறு தொழில் சங்கங்களுடன் தொடர்புடைய நண்பர்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பத்தைச் சேர்ந்த எனது இளம் நண்பர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள், எனதருமை சகோதர, சகோதரிகளே,இ-ருபி டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் தொடங்கி வைத்தார்
August 02nd, 04:49 pm
இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் கட்டணத்திற்கான பணமில்லா மற்றும் தொடர்பில்லா கருவியாகும்.