
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க கெய்சாய் டோயுகாய் உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் சந்திப்பு
March 27th, 08:17 pm
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான கருத்துக்களையும் யோசனைகளையும் கேட்க, கெய்சாய் டோயுகையின் (ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கம்) தலைவர் திரு. தகேஷி நினாமி தலைமையில் கெய்சாய் டோயுகை மற்றும் 20 பிற வணிக பிரதிநிதிகளின் உயர் அதிகாரம் கொண்ட குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்தார்.
வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தின் 7-வது கூட்டம் மார்ச் 3-ம் தேதி கிர் நகரில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது
March 03rd, 04:48 pm
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10-வது ஆண்டை முன்னிட்டு பிரதமர் மகிழ்ச்சி
January 22nd, 10:04 am
பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று (22.01.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மாறியுள்ளது என்றும், அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பையும் ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். வரலாற்று ரீதியில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, இந்த இயக்கத்தை அடிமட்ட அளவில் துடிப்பானதாக மாற்றிய அனைத்து தரப்பினரையும் பாராட்டியுள்ளார்.தேர்தல் ஆணையம் அவ்வப்போது நமது வாக்குப்பதிவு செயல்முறையை பலப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’தின் போது (மனதின் குரல்)
January 19th, 11:30 am
In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 05th, 06:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.The World This Week on India
December 24th, 11:59 am
India’s footprint on the global stage this week has been marked by a blend of diplomatic engagements, economic aspirations, cultural richness, and strategic initiatives.The World This Week on India
December 17th, 04:23 pm
In a week filled with notable achievements and international recognition, India has once again captured the world’s attention for its advancements in various sectors ranging from health innovations and space exploration to climate action and cultural influence on the global stage.தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
December 15th, 10:15 pm
தில்லியில் இன்று நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 4-வது தேசிய மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மூன்று நாள் மாநாடு 2024 டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லியில் நடைபெற்றது.கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 29th, 09:54 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, பூமியின் நிலையான சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
November 16th, 09:56 pm
மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரக்கன்று நட்டு, பூமியின் நிலையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.உத்தராகண்ட் உருவாக்க தினத்தையொட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
November 09th, 11:00 am
உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. அதாவது, உத்தரகண்ட் அதன் 25 வது ஆண்டில் நுழைகிறது. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உத்தராகண்டின் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பயணத்தை நாம் தொடங்க வேண்டும். இதில் ஒரு மகிழ்ச்சிகரமான தற்செயல் நிகழ்வு உள்ளது: நமது முன்னேற்றம் தேசிய வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க காலகட்டமான பாரதத்தின் அமிர்த காலத்துடன் ஒத்துப்போகிறது. இந்த சங்கமம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த சகாப்தத்தில் நமது பகிரப்பட்ட விருப்பங்கள் நனவாகின்றன. வரும் 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை மையமாகக் கொண்டு உத்தராகண்ட் மக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் மூலம், உத்தராகண்டின் பெருமை கொண்டாடப்படும். வளர்ந்த உத்தராகண்ட் என்ற பார்வை ஒவ்வொரு குடியிருப்பாளரிடமும் எதிரொலிக்கும். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்திற்காக, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு நாட்கள் முன்பாக, வெளிநாடுவாழ் இந்தியத் தலைவர் உத்தராகண்ட் சம்மேளனமும் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புலம்பெயர்ந்த நமது உத்தராகண்ட் மக்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்காற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.தேவபூமி உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உத்தராகண்ட் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
November 09th, 10:40 am
உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், உத்தராகண்ட் மாநிலம் உருவான வெள்ளி விழா ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது என்று குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மாநில மக்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் உத்தராகண்டின் 25 ஆண்டுகால பயணம் ஒரு பெரிய நிகழ்வு என்று கூறிய அவர், இந்தியா அதன் அடுத்த 25 ஆண்டு கால அமிர்த காலத்தில், வளர்ச்சி அடைந்த பாரதத்தில் வளர்ச்சியடைந்த உத்தராகண்டையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார். இந்தக் காலகட்டத்தில் நமது தீர்மானம் நிறைவேற்றப்படுவதை நாடு காணும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். எதிர்வரும் 25 ஆண்டுகளில் தீர்மானங்களுடன் பல்வேறு திட்டங்களை மக்கள் மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் மூலம் உத்தராகண்டின் பெருமை பரவும் என்றும், வளர்ச்சியடைந்த உத்தராகண்ட் என்ற இலக்கு மாநிலத்தின் ஒவ்வொரு நபரையும் சென்றடையும் என்றும் அவர் கூறினார். இந்த முக்கியமான தருணத்தில், இந்த முக்கியமான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதற்காகவும் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அண்மையில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பிரவாசி உத்தராகண்ட் சம்மேளனம்' நிகழ்ச்சியை குறிப்பிட்ட பிரதமர், வெளிநாடு வாழ் உத்தராகண்ட் மக்கள் உத்தராகண்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை
October 25th, 07:47 pm
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்தூய்மையான எரிசக்தி காலத்தின் தேவை: பிரதமர்
October 21st, 05:20 pm
தூய்மையான எரிசக்தி காலத்தின் தேவை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். சிறந்த எதிர்காலத்திற்கான அரசின் உறுதிப்பாடு மிக முக்கியமானது என்றும், இது அவர்களின் பணிகளில் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.