ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 'ஓராண்டு நிறைவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
December 17th, 12:05 pm
கோவிந்த் நகரில் நான் கோவிந்த் தேவ் அவர்களுக்கு வணக்கங்களைச் செலுத்துகிறேன். அனைவருக்கும் என் வணக்கங்கள்!ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'ஓராண்டு முடிவில் முன்னேற்றம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
December 17th, 12:00 pm
ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டு நிறைவையொட்டி கொண்டாடப்பட்ட ஓராண்டு முடிவில் முன்னேற்றம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், ராஜஸ்தான் மாநில அரசின் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ராஜஸ்தான் அரசுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு புதிய திசை காட்டுவற்கும் வேகத்தை அதிகரிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார். முதலாம் ஆண்டு வரவிருக்கும் பல ஆண்டு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சி அரசின் ஓராண்டு நிறைவைக் குறிப்பது மட்டுமின்றி, ராஜஸ்தானின் பிரகாசமான ஒளியையும் ராஜஸ்தானின் வளர்ச்சித் திருவிழாவையும் அடையாளப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான் எழுச்சி உச்சி மாநாடு 2024-க்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த திரு மோடி, உலகெங்கிலும் உள்ள பல முதலீட்டாளர்கள் அதில் கலந்து கொண்டதாகவும், இன்று ரூ .45,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் தண்ணீர் தொடர்பாக எதிர்கொள்ளும் தடைகளுக்கு பொருத்தமான தீர்வை வழங்கும் என்றும், இந்தியாவுடன் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானை மாற்றும் என்றும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பணிகள் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும். ராஜஸ்தானின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
December 17th, 10:42 am
கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.கூட்டு முயற்சிகளுக்கு நன்றி. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது: பிரதமர்
December 03rd, 07:10 pm
புலிகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவில் கூடுதலாக 57-வது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவது இயற்கையை நேசிக்கும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
November 21st, 09:13 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்றனர்
November 20th, 11:27 pm
கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.புதுதில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவ தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 15th, 06:32 pm
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, காணொலி மூலம் நம்முடன் இணைந்துள்ள முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேடையில் குழுமியிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே! வணக்கம்.தில்லியில் முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 06:30 pm
அமைதியை நிலைநிறுத்தவும், துடிப்பான போடோ சமூகத்தை உருவாக்கவும் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவை குறித்த இரண்டு நாள் மாபெரும் நிகழ்ச்சியான முதலாவது போடோலாந்து மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.Tribal society is the one that led the fight for centuries to protect India's culture and independence: PM Modi
November 15th, 11:20 am
PM Modi addressed Janjatiya Gaurav Diwas, emphasizing India's efforts to empower tribal communities, preserve their rich heritage, and acknowledge their vital role in nation-building.பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
November 15th, 11:00 am
பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் 555-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால் குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:05 pm
நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.
October 31st, 07:00 pm
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 05:22 pm
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 03:25 pm
இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
October 23rd, 03:10 pm
கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.