உயிரி தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் ஊக்குவிக்க 'உயிரி ரைடு' என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 18th, 03:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (18.09.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development -Bio- RIDE) என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
September 18th, 03:20 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.பிரதமரின் சூரஜ் இணைய தளத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 13th, 04:30 pm
சமூக நீதித் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார் அவர்களே, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள இருக்கும் அரசுத் திட்டங்களின் பயனாளிகளே, நமது துப்புரவுப் பணியாளர் சகோதர சகோதரிகளே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே! நாட்டின் 470 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
March 13th, 04:00 pm
நாடு முழுவதும் நலிவடைந்த பிரிவினருக்கு கடன் ஆதரவு அளிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமரின் சமாஜிக் உத்தன் ஏவம் ரோஜ்கர் ஆதாரித் ஜன்கல்யாண் என்ற பிஎம்-சுராஜ் (PM-SURAJ - பிரதமரின் சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான மக்கள் நலன்) தேசிய தளத்தை அவர் தொடங்கி வைத்தார். நாட்டில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் தொழில்முனைவோருக்கு கடன் உதவியையும் அவர் வழங்கினார். பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த, பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.Cabinet approves inclusion of additional activities in National Livestock Mission
February 21st, 11:29 pm
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved further modification of National Livestock Mission.உங்கள் செயல்களின் மூலம் திருநங்கைகளால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டுகிறீர்கள்- சிறந்த சேவை புரிவதாக மும்பையைச் சேர்ந்த திருநங்கை கல்பனாவிடம் பிரதமர் கூறினார்
January 18th, 04:01 pm
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 19th, 11:32 pm
நான் உங்கள் அனைவரிடமும் பேசுவதை மிகவும் ரசித்தேன். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக நாட்டின் இளைய தலைமுறையினர் இரவு பகலாக உழைத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஹேக்கத்தான்களிலிருந்து பெறப்பட்ட தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஹேக்கத்தான்களில் பங்கேற்ற பல மாணவர்கள் சொந்தமாகப் புத்தொழில் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். இந்தப் புத்தொழில் மற்றும் தீர்வுகள் அரசுக்கும் சமூகத்திற்கும் உதவுகின்றன. இன்று நடைபெறும் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்கும் அணிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
December 19th, 09:30 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 104 வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 27th, 11:30 am
எனதருமை குடும்பத்தாரே, வணக்கம். மனதின் குரலின் ஆகஸ்ட் மாதப் பகுதியில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நிறைவான வரவேற்பை அளிக்கிறேன். இப்படி முன்பு எப்போதாவது நடந்திருக்கிறதா என்று நினைவில் இல்லை, அதாவது மழைக்கால மாதங்களில் இருமுறை மனதின் குரல் நிகழ்ச்சி இடம் பெற்றதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த முறை அப்படித்தான் நடக்க இருக்கிறது. மழைக்காலம் அதாவது மஹாசிவனுடைய மாதம், உற்சவம் மற்றும் உல்லாசம் நிறைந்த காலம். சந்திரயானுடைய வெற்றியின் கொண்டாட்டம் இந்த உற்சவச் சூழலுக்கு பல பங்கு உல்லாசத்தைச் சேர்த்திருக்கிறது. சந்திரயான் சந்திரனுக்குப் பயணித்து மூன்று நாட்களுக்கும் கூடுதலாக ஆகியிருக்கிறது. இந்த வெற்றி எத்தனை பெரியது என்றால், இதைப்பற்றி நாம் எத்தனை விவாதித்தாலும், அது குறைவே. நான் இன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையிலே, என்னுடைய பழைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது. …….ஜி 20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் வீடியோ செய்தியின் உரை
August 19th, 11:05 am
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் முன்னெப்போதும் இல்லாதது. இது 2015 ஆம் ஆண்டில் எங்கள் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. புதுமையின் மீதான நமது அசைக்க முடியாத நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது. விரைந்து செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டால் இது இயக்கப்படுகிறது. மேலும், இது யாரையும் விட்டுவைக்காமல், நமது உள்வாங்கும் மனப்பான்மையால் உந்தப்படுகிறது.இந்த மாற்றத்தின் அளவு, வேகம் மற்றும் நோக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இன்று, இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணைய பயன்பாட்டாளர்கள் உலகின் மலிவான தரவு செலவுகளை அனுபவிக்கின்றனர். நிர்வாகத்தை மாற்றுவதற்கும், அதை மிகவும் திறமையான, அனைவரையும் உள்ளடக்கிய, விரைவான மற்றும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும் நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். நமது தனித்துவ டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய ஜாம் மும்மூர்த்திகளின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்கள் உடனடிக் கட்டண அமைப்பான யுபிஐயில் நடைபெறுகின்றன. உலகளாவிய நிகழ்நேரப் பரிவர்தனைகளில் 45% க்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்கின்றன. நேரடிப் பயன்கள் அரசு உதவிப் பரிமாற்றக் கசிவுகளை சரிசெய்கின்றன. மேலும் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மிச்சப்படுத்தியுள்ளது.கோவின் போர்ட்டல் இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது. இது டிஜிட்டல் முறையில் சரிபார்க்கும் சான்றிதழ்களுடன் 2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்க உதவியது. காதி-சக்தி தளம் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை வரைபடமாக்க தொழில்நுட்பம் மற்றும் இடஞ்சார்ந்த திட்டமிடலைப் பயன்படுத்துகிறது.இது திட்டமிடுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.எங்கள் ஆன்லைன் பொது கொள்முதல் தளமான அரசு இ-சந்தை இந்த செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கொண்டு வந்துள்ளது.டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் இ-வணிகத்தை ஜனநாயகப்படுத்துகிறது. முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின் ஆளுமையை ஊக்குவிக்கின்றன.செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியை உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு உதவும்.ஜி 20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை
August 19th, 09:00 am
பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.நமது இளைஞர்களிடையே புத்தாக்க மனப்பான்மையை கற்பித்தலில் அடல் சீரமைப்பு ஆய்வகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்
July 10th, 10:12 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது இளைஞர்களிடையே புத்தாக்க மனப்பான்மையை கற்பித்தலில் அடல் சீரமைப்பு ஆய்வகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.PM Modi and First Lady of the US Jill Biden visit the National Science Foundation
June 22nd, 02:49 am
PM Modi and First Lady of the US Jill Biden visited the National Science Foundation. They participated in the ‘Skilling for Future Event’. It is a unique event focused on promoting vocational education and skill development among youth. Both PM Modi and First Lady Jill Biden discussed collaborative efforts aimed at creating a workforce for the future. PM Modi highlighted various initiatives undertaken by India to promote education, research & entrepreneurship in the country.17-வது வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு 2023
January 06th, 07:27 pm
வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு என்பது இந்திய அரசின் முக்கியமான நிகழ்வாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கிய தளத்தை இது வழங்குகிறது. இந்திய வம்சாவழியினர் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் இது வகைசெய்கிறது. மத்தியப்பிரதேச அரசின் பங்களிப்புடன் 17-வது வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு 2023 ஜனவரி 8 முதல் 10 வரை இந்தூரில் நடைபெற உள்ளது. “இந்திய வம்சாவழியினர்: அமிர்த காலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு நம்பகமான கூட்டாளிகள்” என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும். இந்த மாநாட்டிற்காக சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் அதிகமான இந்திய வம்சாவழியினர் பதிவு செய்துள்ளனர்.சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சிமாநாட்டு துவக்க விழாவில் பிரதமரின் உரை
September 12th, 11:01 am
உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது நாடாளுமன்ற நண்பர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சர்வதேச பால்வள கூட்டமைப்பின் தலைவர் திரு பிரசல் அவர்களே, தலைமை இயக்குநர் திருமிகு கரோலின் எமாண்ட் அவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!PM inaugurates International Dairy Federation World Dairy Summit 2022 in Greater Noida
September 12th, 11:00 am
PM Modi inaugurated International Dairy Federation World Dairy Summit. “The potential of the dairy sector not only gives impetus to the rural economy, but is also a major source of livelihood for crores of people across the world”, he said.Prime Minister Narendra Modi to participate in Udyami Bharat programme at Vigyan Bhawan, New Delhi
June 28th, 07:44 pm
Prime Minister Shri Narendra Modi will participate in the ‘Udyami Bharat’ programme at Vigyan Bhawan in New Delhi on 30th June, 2022 at around 10:30 AM. During the event, Prime Minister will launch the ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP) scheme, ‘Capacity Building of First-Time MSME Exporters’ (CBFTE) scheme and new features of the ‘Prime Minister’s Employment Generation Programme’ (PMEGP). Prime Minister will also digitally transfer assistance to beneficiaries of PMEGP for 2022-23; announce results of MSME Idea Hackathon, 2022; distribute National MSME Awards, 2022; and issue Digital Equity Certificates to 75 MSMEs in the Self Reliant India (SRI) Fund.மத்திய நிதியமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
June 06th, 10:31 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, திரு பகவத் கிருஷ்ணாராவ் அவர்களே, இதர பிரமுகர்களே!PM inaugurates Iconic Week Celebrations of Ministry of Finance & Ministry of Corporate Affairs
June 06th, 10:30 am
PM Modi inaugurated iconic week celebrations of the Ministry of Finance and Ministry of Corporate Affairs. The Prime Minister said the country has borne the brunt of government-centric governance in the past but, today 21st century India is moving ahead with the approach of people-centric governance.