கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 07th, 05:52 pm
பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜ் அவர்களே, மதிப்பிற்குரிய முனிவர்களே, சத்சங்க குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே, புகழ்பெற்ற பிரமுகர்களே, தாய்மார்களே, தாய்மார்களே!அகமதாபாத்தில் நடைபெற்ற கார்யகர் சுவர்ண மகோத்சவ நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 07th, 05:40 pm
அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில்சார் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகராஜ், மதிப்பிற்குரிய துறவிகள், சத்சங்கி குடும்ப உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள், பிரதிநிதிகளை வரவேற்பதாகக் கூறினார். கார்யாகர் சுவர்ண மகோத்சவத்தை முன்னிட்டு பகவான் சுவாமி நாராயணரின் பாதங்களை வணங்குவதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, இந் தநாள் பிரமுக் சுவாமி மகாராஜின் 103-வது பிறந்த நாளும் கூட என்று குறிப்பிட்டார். பகவான் சுவாமி நாராயணரின் போதனைகள், பிரமுக் சுவாமி மகாராஜின் தீர்மானங்கள் ஆகியவை இன்று பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் சுவாமி மகாராஜின் கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் பலனளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார். இளைஞர்கள், குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஏராளமானோர் பங்கேற்கும் இத்தகைய பிரமாண்டமான நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறிய திரு நரேந்திர மோடி, இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும், இந்த நிகழ்ச்சியின் ஆற்றலை உணர முடிகிறது என்று கூறினார். இந்த மகத்தான தெய்வீக விழாவிற்காக பரம் பூஜ்ய குரு ஹரி மஹந்த் ஸ்வாமி மகராஜை வாழ்த்துவதாக அவர் கூறினார்.தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு கயானா அதிபரின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி
November 25th, 10:39 am
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு திரு மோடி மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' நடும் இயக்கத்தில் பங்கேற்றனர்
November 20th, 11:27 pm
கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.அனைவரும் தங்கள் அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு, பூமியின் நிலையான சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்குமாறு மக்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்
November 16th, 09:56 pm
மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரக்கன்று நட்டு, பூமியின் நிலையான சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.Any country can move forward only by being proud of its heritage and preserving it: PM Modi
November 11th, 11:30 am
PM Modi participated in the 200th anniversary celebration of Shree Swaminarayan Mandir in Vadtal, Gujarat. Noting that the 200th year celebrations in Vadtal dham was not mere history, Shri Modi remarked that it was an event of a huge importance for many disciples including him who had grown up with utmost faith in Vadtal Dham. He added that this occasion was a testimony to the eternal flow of Indian culture.PM Modi participates in 200th year celebrations of Shree Swaminarayan Mandir in Vadtal, Gujarat
November 11th, 11:15 am
PM Modi participated in the 200th anniversary celebration of Shree Swaminarayan Mandir in Vadtal, Gujarat. Noting that the 200th year celebrations in Vadtal dham was not mere history, Shri Modi remarked that it was an event of a huge importance for many disciples including him who had grown up with utmost faith in Vadtal Dham. He added that this occasion was a testimony to the eternal flow of Indian culture.என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
October 21st, 10:25 am
கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை - எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 21st, 10:16 am
புதுதில்லியில் இன்று என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன், உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியான் நகரில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
October 10th, 02:35 pm
10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை நான் அறிவித்தேன். கடந்த பத்தாண்டுகளில் இந்த முன்முயற்சி இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளுக்கு புத்துயிர் அளித்து, அவற்றுக்கு புதிய ஆற்றல், திசை மற்றும் உத்வேகத்தை அளித்துள்ளது.லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியான் நகரில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
October 10th, 02:30 pm
இன்று, ஆசியான் குடும்பத்துடன் பதினோராவது முறையாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் பங்கேற்கிறார்
September 30th, 08:59 pm
தூய்மைக்கான மிக முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்
September 17th, 02:17 pm
முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பங்கேற்றனர்.India is the best bet of the 21st century: PM Modi at the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo
September 16th, 11:30 am
Prime Minister Narendra Modi inaugurated the 4th Global Renewable Energy Investor’s Meet and Expo (RE-INVEST) in Gandhinagar, Gujarat. The summit celebrates India's achievement of over 200 GW of non-fossil fuel capacity. The PM said that India's persity, scale, capacity, potential and performance are all unique and pave the way for Indian solutions for global applications.குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
September 16th, 11:11 am
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, 200 ஜிகாவாட் புதைபடிவம அல்லாத எரிபொருள் திறனை நிறுவியதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை கௌரவிக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.தாயின் பெயரில் ஒரு மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுவதற்கு குடியரசுத் துணைத் தலைவருக்கு பிரதமர் பாராட்டு
July 27th, 10:04 pm
குடியரசுத்துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர், தனது தாயாரை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றை நடுவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
June 05th, 02:21 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை திரு மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா பல கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, நாடு முழுவதும் வனப்பகுதியை அதிகரிக்க வழிவகுத்தது என்று தெரிவித்தார். நீடித்த வளர்ச்சியை நோக்கிய நமது முயற்சிக்கு இது மிகப்பெரியது என்று திரு மோடி மேலும் கூறினார்