24.09.2023 அன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 105-வது அத்தியாயத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 24th, 11:30 am
எனதருமைக் குடும்பச் சொந்தங்களே, வணக்கம். மனதின் குரலின் மேலும் ஒரு பகுதியில் உங்கள் அனைவருடனும், தேசத்தின் வெற்றியை, நாட்டுமக்களின் வெற்றியை, அவர்களின் உத்வேகமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை எனக்கு வாய்த்திருக்கிறது. எனக்குக் கிடைக்கும் கடிதங்களில் இப்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் மிக அதிகம் காணப்படுகின்றன. முதலாவதாக, சந்திரயான் – 3இன் வெற்றிகரமான தரையிறங்கல்; இரண்டாவதாக, தில்லியில் நடைபெற்ற ஜி20இன் வெற்றிகரமான ஏற்பாடுகள். தேசத்தின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்துப் பிரிவிடமிருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், எனக்குக் கணக்கில்லாத கடிதங்கள் கிடைத்திருக்கின்றன. சந்திரயான் – 3இன் லேண்டரானது, சந்திரனின் மீது இறங்கும் தருவாயில் இருந்த போது, கோடிக்கணக்கான மக்கள், பல்வேறு வழிகளில், ஒரே நேரத்தில் இந்தச் சம்பவத்தின் ஒவ்வொரு நொடியின் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோ அமைப்பின் யூ ட்யூப் நேரடி ஒளிபரப்பில், 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வினைக் கண்டார்கள் என்பதே கூட மிகப்பெரிய சாதனை. சந்திரயான் – 3உடன் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஈடுபாடு எத்தனை ஆழமாக இருந்திருக்கிறது என்பது இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும். சந்திரயானின் இந்த வெற்றி குறித்து தேசத்தில் இன்றைய காலகட்டத்தில் மிக அருமையான வினா விடைப் போட்டியும் நடைபெற்று வருகிறது; இந்தப் போட்டிக்கு இடப்பட்டிருக்கும் பெயர் – சந்திரயான் – 3 மஹா க்விஸ் ஆகும். மைகவ் தளத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போட்டியில் இதுவரை 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்து விட்டார்கள். மைகவ்வின் தொடக்கத்திற்குப் பிறகு, இது எந்த ஒரு வினா விடைப் போட்டி என்று எடுத்துக் கொண்டாலும், மிகப்பெரிய பங்கெடுப்பு என்று கொள்ளலாம். நீங்கள் இதுவரை இதில் பங்கெடுக்கவில்லை என்றால், காலம் இன்னும் கடந்து விடவில்லை, இப்போது கூட இதிலே இன்னும் 6 நாட்கள் எஞ்சி இருக்கின்றன. இந்த வினாவிடைப் போட்டியில் நீங்களும் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களிடத்திலே நான் கேட்டுக் கொள்கிறேன்.விளாடிவோஸ்டோக்கில் 7வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடியின் கருத்துகள்
September 07th, 02:14 pm
கிழக்குப் பொருளாதார மன்றம் 2022-ன் அமர்வில் பிரதமர் மோடி காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவுடனான தனது கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்கு பெரிய வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மோதலின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா ராஜதந்திரம் மற்றும் உரையாடல் பாதையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.கிழக்கு பொருளாதார அமைப்பு 2021 கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை
September 03rd, 10:33 am
கிழக்கு பொருளாதார அமைப்பில் உரையாற்றுவதில் மகிழ்சியடைகிறேன் மற்றும் இந்த கௌரவத்தை அளித்த அதிபர் புதினுக்கு நன்றி.விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்
September 03rd, 10:32 am
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில், 2021 செப்டம்பர் 3ம் தேதி நடந்த 6வது கிழக்கு பொருளாதார அமைப்பு (EEF) கூட்டத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.கிழக்கத்திய பொருளாதார மன்றத்தின் 5-வது கூட்ட நிறைவு அமர்வில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
September 05th, 01:33 pm
இந்தியாவுக்கும், தொலைதூர கிழக்குப் பகுதிக்கும் இடையேயான நல்லுறவு, இன்று உருவானது அல்ல, இது மிகவும் பழமையானது. விளாடிவோஸ்டோக் நகரில் தனது தூதரகத்தை திறந்த முதல் நாடு இந்தியா. அந்த நேரத்திலும், அதற்கு முன்னதாகவும், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அதிக அளவில் நம்பிக்கை இருந்தது. சோவியத் ரஷ்யாவில் மற்ற வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலும் கூட, இந்திய குடிமக்கள் வருவதற்கு விளாடிவோஸ்டோக் நகரில் அனுமதி அளிக்கப்பட்டது. அதிக அளவிலான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உபகரணங்கள், விளாடிவோஸ்டோக் வழியாக இந்தியாவுக்கு வந்தடைந்தன. இந்த ஒத்துழைப்பு மரம், இன்று வேர் விட்டு ஆழமாக விரிந்துள்ளது. இது இரு நாட்டு மக்களின் நலனுக்கான தூணாக மாறியுள்ளது. எரிசக்தி துறையிலும், வைரங்கள் போன்ற மற்ற இயற்கை வளங்களிலும் இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்திய முதலீட்டின் வெற்றிக்கான சிறந்த உதாரணமாக ஷகாலினின் எண்ணெய்க் கிணறு திகழ்கிறது.பிரதமரின் விளாடிவோஸ்டாக் பயணத்தின் போது இந்தியாவும் – ரஷ்யாவும் வெளியிட்ட கூட்டறிக்கை
September 04th, 02:45 pm
பிரதமரின் விளாடிவோஸ்டாக் பயணத்தின் போது இந்தியாவும் – ரஷ்யாவும் வெளியிட்ட கூட்டறிக்கைPM Modi's interview to TASS, Russian News Agency
September 04th, 10:30 am
In an interview to TASS, Prime Minister Narendra Modi said his meeting with Russian President Vladimir Putin on the sidelines of the Eastern Economic Forum in Russia’s Far Eastern city of Vlapostok will give a new impetus to bilateral ties. I am confident that this visit will give a new vector, new energy and a new impetus to the relations between our countries, PM Modi said in the interview.PM Modi arrives in Vladivostok, Russia
September 04th, 05:15 am
PM Modi arrived in Vlapostok, Russia. During his visit, the PM will participate on the Eastern Economic Forum and also hold the India-Russia Annual Summit with President Putin.கிழக்கு பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யாவில் உள்ள விளாடிவொஸ்தக் பயணத்திற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
September 03rd, 11:35 am
2019 செப்டம்பர் 4, 5 தேதிகளில் நான் ரஷ்யாவின் விளாடிவொஸ்தக் நகருக்கு பயணம் மேற்கொள்கிறேன்.ரஷ்யாவின் தூரக்கிழக்கு பிராந்தியத்திற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் முதன் முறையாக மேற்கொள்ளும் பயணமாக இது அமைகிறது. வளர்ச்சியடைந்து வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலதுறைகளில், உறவை மேம்படுத்தும் இருதரப்பு விருப்பத்தை பூர்த்தி செய்வதாகவும் இந்தப் பயணம் அமையும்.