லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

October 11th, 01:43 pm

லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் செயலாளரும், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் அதிபருமான திரு தோங்லூன் சிசோலித்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, வியன்டியானில் இன்று சந்தித்தார். ஆசியான் உச்சிமாநாட்டையும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் திரு சிசோலித்தைப் பிரதமர் பாராட்டினார்.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

October 11th, 12:41 pm

2024, அக்டோபர் 11 அன்று, வியன்டியானில், கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் திருமதி பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 11th, 08:15 am

ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.

19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

October 11th, 08:10 am

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியான் பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

October 10th, 07:00 am

21-வது ஆசியான் – இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு சோனெக்சே சிபன்டோன் விடுத்த அழைப்பின் பேரில் லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியானுக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று நான் தொடங்குகிறேன்.

Prime Minister Narendra Modi to visit Vientiane, Laos

October 09th, 09:00 am

At the invitation of H.E. Mr. Sonexay Siphandone, Prime Minister of the Lao People’s Democratic Republic, Prime Minister Shri Narendra Modi will visit Vientiane, Lao PDR, on 10-11 October 2024.During the visit, Prime Minister will attend the 21st ASEAN-India Summit and the 19th East Asia Summit being hosted by Lao PDR as the current Chair of ASEAN.

18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 07th, 01:28 pm

கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

பிரதமர் மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார்

September 07th, 06:58 am

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சென்றடைந்தார். அவர் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் வந்தவுடன், ஜகார்த்தாவில் பிரதமரை இந்திய சமூகத்தினர் அன்புடன் வரவேற்றனர்

16-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் அக்டோபர் 27,2021 அன்று பிரதமர் பங்கேற்றார்

October 27th, 10:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (27-10-2021) நடைபெற்ற 16-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் காணோலி வாயிலாக பங்கேற்றார். கிழக்கு ஆசியா உச்சி மாநாடு மற்றும் ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் புருனே நாடு 16-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டை நடத்தியது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான். தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசியான் நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பங்கேற்பு நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இந்தியா முக்கியப் பங்குதாரராக இருந்தது. இது, பிரதமர் பங்கேற்கும் 7-வது கிழக்கு ஆசியா உச்சி மாநாடாகும்.

18-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 28, 2021 மற்றும் 16-வது கிழக்காசிய உச்சி மாநாடு அக்டோபர் 27, 2021

October 25th, 07:32 pm

புருனே சுல்தான் அழைப்பின் பேரில் 2021 அக்டோபர் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறும் 18-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாங்காக்கில் கிழக்கு ஆசியா மற்றும் ஆர்செப் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

November 04th, 11:54 am

பாங்காக்கில் இன்று (04.11.2019) நடைபெறும் கிழக்காசியா மற்றும் ஆர்செப் உச்சி மாநாடுகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இது தவிர, பாங்காக்கில் இருந்து இன்றிரவு புதுதில்லி திரும்புவதற்கு முன்பாக, ஜப்பான் பிரதமர் திரு ஷின்ஸோ அபே, வியட்நாம் பிரதமர் திரு க்யூன் சுவான் ஃபுக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்காட் மோரிசன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் சந்திக்கிறார்

November 04th, 11:43 am

பாங்காக்கில் இன்று கிழக்காசியா உச்சிமாநாட்டிற்கிடையே ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-யை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த ஆண்டில் பின்னர் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்த ஏற்பாடுகள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

மியன்மர் அரசு ஆலோசகருடன் பிரதமர் சந்திப்ப

November 03rd, 06:44 pm

2019 நவம்பர் 3 அன்று நடைபெற்ற ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டின் இடையே மியான்மர் அரசு ஆலோசகரான ஆங் சன் சு குயியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். 2017 நவம்பரில் மியன்மருக்கு வருகை தந்ததை நினைவு கூர்ந்ததோடு, 2018 ஜனவரியில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின்போது அரசு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த இரு நாடுகளுக்கும் இடையே உயிரோட்டமான பங்கெடுப்பு முன்னேறி வருவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 03rd, 06:17 pm

ஆசியான் அமைப்பு, கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தோனேசிய அதிபர் மதிப்பிற்குரிய ஜோகோ விடோடோவை பாங்காக் நகரில் 2019 நவம்பர் 3 ஆம் தேதி சந்தித்தார்.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

November 03rd, 06:07 pm

ஆசியான் அமைப்பின் 35வது உச்சி மாநாடு, 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 16வது இந்திய- ஆசியான் அமைப்பின் உச்சிமாநாடு ஆகிய நிகழ்வுகளுக்கு இடையே தாய்லாந்து பிரதமர் ஜெனரல் (ஓய்வு) பிராயுத் சான் ஓ சா-வை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2019 நவம்பர் 3 அன்று சந்தித்தார்.

தாய்லாந்து பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

November 02nd, 09:11 am

“நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டிலும், நவம்பர் 4 அன்று நடைபெற உள்ள 14-வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும், மண்டல ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடலுக்கான அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டிலும் பங்கேற்க நாளை நான் பாங்காக் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறேன்.

PM’s meetings on the sidelines of East Asia Summit in Singapore

November 14th, 12:35 pm

PM Narendra Modi held talks with several world leaders on the margins of the East Asia Summit in Singapore.

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமரின் அறிக்கை

November 13th, 07:38 pm

Following is the text of the Prime Minister Shri Narendra Modi's departure statement prior to his visit to Singapore.

மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு மிகுந்த சக்தியைத் தருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

July 03rd, 12:41 pm

சமீபத்திய நேர்காணலில், வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சி மீது அரசின் கவனம் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பொருளாதாரம், பாதுகாப்பு,சமூக நீதி மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்ற பல்வேறு அம்சங்களில் அரசு நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

“வலுவான ஒத்துழைப்பு உறுதியான எதிர்காலம் ஆகியவற்றில் புதிய ஒருங்கமைவை எதிர்நோக்கி உள்ளது. ஆசியான் – இந்தியா அமைப்பு” : லீ சியான் லூங்

January 25th, 11:32 am

ஆசியான் அமைப்பு தலைவரான சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியான் லூங் எழுதிய கட்டுரைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.