‘தடுப்பூசித் திருவிழாவை’ முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தி
April 11th, 09:22 am
திரு ஜோதிபா புலேவின் பிறந்த நாளான ஏப்ரல் 11 முதல், ‘தடுப்பூசித் திருவிழாவை' இன்று நாம் துவக்குகிறோம். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 வரை ‘தடுப்பூசித் திருவிழா' தொடர்ந்து நடைபெறும்.‘தடுப்பூசித் திருவிழா’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போர் துவக்கம் பிரதமர்
April 11th, 09:21 am
‘தடுப்பூசித் திருவிழாவை’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர் சுகாதாரத்துடன், சமூக சுகாதாரத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.