வாரணாசியில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

October 20th, 02:21 pm

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரும், வணக்கத்திற்குரிய ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி; உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்; முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்; துணை முதலமைச்சர், பிரஜேஷ் பதக்; சங்கரா கண் அறக்கட்டளையின் ஆர்.வி.ரமணி; டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம்; திரு முரளி கிருஷ்ணமூர்த்தி; ரேகா ஜுன்ஜுன்வாலா; மற்ற மதிப்புமிக்க உறுப்பினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்

October 20th, 02:15 pm

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்ஜே சங்கரா கண் மருத்துவமனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை பல்வேறு கண் நோய்களுக்கு விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திரு மோடி பார்வையிட்டார்.

ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை

August 18th, 02:15 pm

இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக, இந்தியாவிற்கும், எனது சொந்த மாநிலமான குஜராத்திற்கும் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன். உங்களை வரவேற்பதில் என்னுடன் 2.4 மில்லியன் மருத்துவர்கள், 3.5 மில்லியன் செவிலியர்கள், 1.3 மில்லியன் துணை மருத்துவ பிரிவினர், 1.6 மில்லியன் மருந்தாளுநர்கள் மற்றும் இந்தியாவில் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான மற்றவர்கள் உள்ளனர்.

ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை

August 18th, 01:52 pm

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின விழாவில் பிரதமர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

May 11th, 11:00 am

நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது சக ஊழியர்களான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் எனது இளம் சக ஊழியர்களே, இந்திய வரலாற்றின் பெருமைமிகு நாட்களில் இன்றைய நாளும் ஒன்று. இந்த நாளில் தான் இந்திய அறிஞர்கள் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் பெருமை பட வைத்தனர். அடல் பிகாரிப் வாஜ்பாய், இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றதை இந்த நாளில் அறிவித்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பொக்ரான் அணுகுண்டு சோதனை, இந்தியாவின் அறிவியல் வல்லமையை நிரூபித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தையும் நிலை நிறுத்தியது. “நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தவொரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை” என்ற அடல் பிகாரி வாஜ்பாய்-ன் வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்.

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

May 11th, 10:30 am

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.

குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 14th, 12:45 pm

அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் திரு. கேசப் மஹந்தா அவர்களே, உங்கள் அனைவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.

அசாம் மாநிலம் குவாஹத்தியில் ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 14th, 12:30 pm

அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி,நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை வழங்கி ‘உங்கள் வீடு தேடி மருத்துவம்’ இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்

இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் இன்று ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 18th, 11:17 pm

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த மாநாட்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மின்னணு வாயிலாக இணைந்துள்ள கருத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருளான 'இந்தியாவின் தருணம்' எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இது உண்மையிலேயே இந்தியாவின் தருணம் என்ற குரலை இது எதிரொலிக்கிறது. அதே நம்பிக்கையை இந்தியா டுடே குழுமம் பிரதிபலிப்பது இந்தக் குரலை மேலும் சிறப்பானதாக்குகிறது.

இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் உரை

March 18th, 08:00 pm

புது தில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர்

March 06th, 09:07 pm

தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்குவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் ஷேர்காவோன் கிராமத்தில் ஒரே ஒரு செல்பேசி வழங்கும் நிறுவனமே இயங்கியதாக மாநிலங்களவை உறுப்பினர் திரு நபம் ரெபியா வெளியிட்டிருந்த தொடர் ட்விட்டர் பதிவிற்கு திரு மோடி பதிலளித்தார்.

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமரின் உரை

March 06th, 10:30 am

கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் சுகாதாரத்தைக் காண முடியும். வளமிக்க நாடுகளைக்கூடப் பெருந்தொற்று சோதித்தது. தொற்றுநோய் உடல்நலத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தியா அதற்கு மேலாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியது. அதனால்தான் ஒரே பூமி, ஒரே மாதிரியான சுகாதாரம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையே உலகிற்கு உணர்த்தியது. இது மனிதர்கள், விலங்குகள் அல்லது தாவரங்கள் ஆகிய அனைத்துப் படைப்பினங்களின் ஒட்டுமொத்த உடல்நலன் தொடர்புடையது.

“சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்”

March 06th, 10:00 am

சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டத் திட்டங்களை திறனுடன் அமல்படுத்துவது குறித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளின்

மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் அற்புதமான ஊடகமாக ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மாறியுள்ளது: பிரதமர் மோடி

February 26th, 11:00 am

நண்பர்களே, இன்று இந்தச் சந்தர்ப்பத்தில் லதா மங்கேஷ்கர் அவர்கள், லதா அக்காவின் நினைவு எழுவது என்பது மிகவும் இயல்பான விஷயம் தான். ஏனென்றால் இந்தப் போட்டி தொடங்கிய வேளையில், அன்றைய நாளன்று தான் லதா அக்கா ஒரு ட்வீட் வாயிலாக, நாட்டுமக்களிடம் இந்த நிகழ்ச்சியோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.