டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள குழுவினரிடம் காணொலி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:02 pm

நாட்டுமக்கள் அனைவரின் உணர்வுகளும் உங்களுடன் இருக்கும். நான் உங்கள் அனைவரையும் மொத்தமாக காணும்போது, மனஉறுதி, தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்கள் பிரதிபலித்ததை அறிந்துகொள்ள முடிந்தது. உங்களுக்கு கடமை உணர்வும், போட்டித் தன்மையும் இருக்கிறது. இந்த நற்பண்புகள் அனைத்தும் புதிய இந்தியாவையே சாரும். உங்களில் சிலர், நாட்டின் தென் மாநிலங்கள், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சிலர், தங்களது கிராமத்துக் களங்களிலிருந்து விளையாட்டுக்களைத் தொடங்கியவர்கள். சிலர், குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சி அமைப்புகள் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் தற்போது, நீங்கள் அனைவரும் ‘ இந்திய அணி‘-யின் அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நாட்டிற்காக விளையாட இருக்கிறீர்கள். இந்த பன்முகத்தன்மை, அணி ஒற்றுமை, ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்‘ என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய தடகள வீரர்களுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்

July 13th, 05:01 pm

பிரதமர்; உங்களுடனும், உங்களது சகாக்களுடனும் முந்தைய மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் விவாதித்துள்ளேன். அண்மையில் பாரிசில் தங்கம் வென்ற பின்னர் நாடு பற்றி நீங்கள் பேசினீர்கள். இன்று நீங்கள் தான் உலகின் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளீர்கள். நீங்கள் குழந்தை பருவத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாம்பழங்களைப் பயன்படுத்தியதாக நான் அறிந்தேன். மாம்பழங்களுடனான உங்களது பயணம் மிகவும் சிறப்பானது. இந்தப் பயணம் குறித்து நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது. இதுபற்றி நீங்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

July 13th, 05:00 pm

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற டூட்டிசந்த்-க்கு பிரதமர் பாராட்டு

July 10th, 01:01 pm

மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற டூட்டிசந்த்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.