மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
January 04th, 12:46 pm
மூத்த அணு விஞ்ஞானி டாக்டர் ராஜகோபால சிதம்பரம் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜகோபால சிதம்பரம், இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய சிற்பிகளில் ஒருவராக இருந்தார். இந்தியாவின் அறிவியல் மற்றும் பாதுகாப்பு உத்தி திறன்களை வலுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கினார் என திரு மோடி கூறியுள்ளார்.