டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹதாப் இந்திய சுதந்திரத்திற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவ வாழ்க்கையை உறுதி செய்வதற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச் சிறந்த ஆளுமை: பிரதமர்
November 22nd, 03:11 am
இந்தியாவை விடுதலையடையச் செய்வதற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான மற்றும் சமத்துவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகச் சிறந்த ஆளுமை டாக்டர் ஹரேகிருஷ்ணா மகதாப் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார். அவரது 125-வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தியுள்ள திரு மோடி, டாக்டர் மஹ்தாப்பின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.