சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு
October 15th, 02:23 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.பிரதமருடன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொரீன் போக்டன்-மார்ட்டின் சந்திப்பு
March 24th, 08:28 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய பொதுச் செயலாளர் டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்தார். சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினர்.