பிரதமர் மோடி & இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, நகரும் கடல் நீரிலிருந்து உப்பை பிரிக்கும் அமைப்பை சோதனை நிகழ்வை காட்சிபடுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்

July 06th, 02:36 pm

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு நகரும் கடல் நீரிலிருந்து உப்பை பிரிக்கும் அமைப்பின் சோதனை நிகழ்வை காட்சி படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கேல்-மொபைல் தனிப்பட்ட, ஒருங்கிணைந்த தண்ணீர் சுத்திகரிப்பு வாகனம், உயர் தர குடிநீரை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. வெள்ளம், பூமி நடுக்கம், போன்ற இயறகை பேரழிவின் போது, கரடுமுரடான பாதையில் ராணுவ வாகனம் செல்வதற்கு, கிராமப்புற பகுதியில், இது பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாளுக்கு 20,000 லிட்டர் உப்பு நீர் சுத்திகரிக்கப்படும், மேலும், ஒரு நாளுக்கு 80,000 லிட்டர் உவர் நீர்/சேரான அல்லது மாசுபட்ட ஆற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பு தரத்துக்கு உயர்த்தப்படும்.