அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் – வளர்ச்சியடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 11:09 am

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, இணை அமைச்சர்களே, சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களே, இதர அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 09th, 10:46 am

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ. 55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த திரு நரேந்திர மோடி பல புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான உன்னதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியதாகும்.

தோன்யி போலோ விமான நிலையம் திறந்ததையடுத்து அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா அதிகரிக்கும் என பிரதமர் நம்பிக்கை

November 30th, 04:30 pm

இடா நகரில் தோன்யி போலோ விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா உத்வேகம் பெறும் என பிரதமர் திரு நரேந்திர மோடி, நம்பிக்கை தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பகிர்ந்துள்ள வீடியோவை பிரதமர் பாராட்டியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசம் எனும் மகத்தான மாநிலத்திற்குப் பணியாற்றுவதும் அதன் உண்மையான ஆற்றலை உணரவைக்க உதவுவதும் பெருமைக்குரியது: பிரதமர்

November 20th, 09:59 am

பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக ட்விட்டரில் தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்த மக்களுக்குப் பிரதமர் பதிலளித்துள்ளார். இட்டாநகரில் டோன்யி போலோ விமான நிலையத்தை நேற்று திறந்துவைத்த பிரதமர் 600 மெகாவாட் கமேங் புனல் மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்

November 17th, 03:36 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.