இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)
August 22nd, 08:22 pm
2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:"உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுதல்" தொடர்பாக இந்தியா-போலந்து கூட்டறிக்கை
August 22nd, 08:21 pm
போலந்து பிரதமர் திரு. டொனால்ட் டஸ்க்கின் அழைப்பின் பேரில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 21 முதல் 22 வரை போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த வரலாற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போலந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
August 22nd, 06:10 pm
இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா-போலந்து இடையேயான நல்லுறவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர். வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர். உணவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சுரங்கம், தூய்மைத் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்புக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 03:00 pm
வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார் பிரதமர் மோடி
August 21st, 06:11 pm
பிரதமர் நரேந்திர மோடி போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார். 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. அவர் ஜனாதிபதி மேதகு திரு. அட்ரஸிஜ் செபாஸ்டியன் டுடே மற்றும் பிரதமர் மேதகு திரு. டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்திப்பார். போலந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் உரையாடுவார்.போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
August 21st, 09:07 am
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் 70-வது ஆண்டினைக் குறிப்பதாகும். மத்திய ஐரோப்பிய பகுதியின் பொருளாதாரத்தில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்மைத்துவத்திற்கான எங்களின் பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த நட்புறவு மேலும் வலுப்படுத்தும். நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கு எனது நண்பர் பிரதமர் டொனால்ட் டஸ்க், அதிபர் ஆந்ரீஸ் டூடா ஆகியோருடனான சந்திப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன். போலந்தில் உள்ள ஆர்வமிக்க இந்திய சமூகத்தினரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் பயணம்
August 19th, 08:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 ஆகஸ்ட் 21-22 தேதிகளில் போலந்து செல்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் போலந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.போலந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டொனால்ட் டஸ்க்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
December 14th, 01:08 pm
போலந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டொனால்ட் டஸ்க்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியா - இயு மாநாட்டு நிகழ்வு பற்றிய பிரதமர் அறிக்கை
October 06th, 02:45 pm
பிரதமர் நரேந்திரமோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு.டொனால்டு டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன் களவுட் ஜுங்கர்ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இதன்பிறகு கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், உலக அளவில் ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தனது உறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.PM Modi attends 13th India-EU Summit
March 30th, 10:28 pm
Prime Minister Modi meets Donald Tusk and Jean-Claude Juncker
November 15th, 11:57 pm