டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 09:29 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

November 21st, 05:39 am

பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கௌரவ விருதை வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறவுள்ள டிஇஆர்ஐ-யின் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் தொடக்க உரை ஆற்றுகிறார்

February 15th, 11:32 am

2022-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி மாலை 6 மணியளவில் எரிசக்தி மற்றும் ஆதார வள நிறுவனத்தின் (டிஇஆர்ஐ) உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றவுள்ளார்.