டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
November 21st, 05:39 am
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கௌரவ விருதை வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
May 22nd, 12:14 pm
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது