கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.குடியரசுத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்
October 31st, 10:46 pm
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.குடியரசு துணைத் தலைவரை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்
October 31st, 10:46 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கரை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புப் படையினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:05 pm
நாட்டின் எல்லையில், சர் க்ரீக் அருகில், கட்ச் மண்ணில், நாட்டின் ஆயுதப்படைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். தீபாவளி நல்வாழ்த்துகள்!குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடினார்.
October 31st, 07:00 pm
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தீபாவளியைக் கொண்டாடினார். இந்தியாவின் ஆயுதப்படைகளுடன் பண்டிகையைக் கொண்டாடும் தமது பாரம்பரியத்தைப் பிரதமர் தொடர்ந்தார். கழிமுகப் பகுதியில் உள்ள எல்லைக் காவல் நிலையங்களில் ஒன்றையும் பார்வையிட்ட பிரதமர், வீரம் செறிந்த பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 31st, 07:32 am
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.குஜராத்தின் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:31 am
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வும் ஒட்டுமொத்த தேசத்தையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய ஒற்றுமை தினத்தன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
October 31st, 07:30 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற ஒருமைப்பாட்டு தின அணிவகுப்பையும் திரு மோடி பார்வையிட்டார்.தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
October 30th, 09:39 pm
தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேதகு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, பாங்காக்கில் குட்டி இந்தியாவில் உள்ள பஹுரத்தில் அற்புதமான தாய்லாந்து தீபாவளி விழா 2024-ஐ இன்று தொடங்கி வைத்தார். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்.அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 29th, 01:28 pm
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
October 29th, 01:00 pm
தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரை
October 20th, 04:54 pm
மேடையில் அமர்ந்திருக்கும் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மதிப்பிற்குரிய ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு நாயுடு அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணைந்துள்ள மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர்களே, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
October 20th, 04:15 pm
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இன்றைய திட்டங்களில் ரூ.6,100 கோடி மதிப்பிலான பல விமான நிலைய திட்டங்களும் வாரணாசியில் பல வளர்ச்சி முன்முயற்சிகளும் அடங்கும்.அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 28th, 11:30 am
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர் திரு நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 22nd, 05:12 pm
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
January 22nd, 01:34 pm
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 15th, 12:15 pm
வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.