ஜி20 கல்வித்துறை அமைச்சர்களின் மாநாட்டின் போது வெளியிடப்பட்ட பிரதமரின் வீடியோ காட்சி வாயிலான செய்தியின் தமிழாக்கம்

June 22nd, 11:00 am

ஜி20 கல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கு நான் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கல்வி என்பது நமது நாகரிகத்தைக் கட்டமைத்த அடித்தளம் மட்டுமல்ல, அது எதிர்கால மனித சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாகவும் உள்ளது. கல்வித்துறை அமைச்சர்களாகிய நீங்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்குமான வளர்ச்சி, அமைதி, செழுமைக்கான முயற்சியில் நீங்கள் முன்னணி வகிக்கின்றனர். கல்வியின் பங்களிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் கருவியாக திகழ்கிறது என்று இந்திய வேதங்கள் கூறுகின்றன. உண்மையான அறிவு பணிவையும், பணிவிலிருந்து மதிப்பையும், மதிப்பில் இருந்து செல்வத்தையும் தருகிறது, செல்வம் ஒருவருக்கு நற்செயல்களைச் செய்ய உதவுகிறது. அதுவே மகிழ்ச்சியைத் தருகிறது என்பது சமஸ்கிருத வரிகளாகும். ஒட்டுமொத்த மற்றும் விரிவான பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது. அடிப்படை எழுத்தறிவு முறைகள் இளைஞர்களுக்கான வலுவான அடித்தளமாக இருக்கிறது, இதனை இந்திய தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. இதற்காக புரிதலுடன் படிப்பதில் புலமை மற்றும் எண்ணறிவு திறமைக்கான தேசிய முன்னெடுப்பு அல்லது அரசின் நிபுன் பாரத் முன்னெடுப்பை நாம் தொடங்கியுள்ளோம். ஜி20-ன் முன்னுரிமையாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறமை கண்டறியப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து 2030-ம் ஆண்டுக்குள் நாம் அவசியம் கண்டறியவேண்டும்.

ஜி20 கல்வி அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் உரை

June 22nd, 10:36 am

புனேவில் இன்று (2023, ஜூன் 22) நடைபெற்ற ஜி20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ காட்சி மூலம் உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மரியாதை செலுத்துவதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

January 23rd, 08:03 pm

நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

ஜூலை 4 அன்று பீமாவரம் மற்றும் காந்திநகருக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

July 01st, 12:16 pm

2022 ஜூலை 4 அன்று ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்திற்கும் குஜராத்தின் காந்திநகருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாளின் ஓராண்டுகால விழாவை அன்றுகாலை 11 மணிக்கு பீமாவரத்தில் பிரதமர் தொடங்கிவைப்பார். அதன்பிறகு பிற்பகல் 4.30 மணியளவில் காந்திநகரில் டிஜிட்டல் இந்தியா வாரம் 2022-ஐ பிரதமர் தொடங்கிவைப்பார்.

NEP is a big factor in the ‘mahayagya’ of national development: PM Modi

July 29th, 05:54 pm

The Prime Minister, Shri Narendra Modi addressed policy makers in the domain of education and skill development, students and teachers, across the country via video conferencing, to mark the completion of one year of reforms under the National Education Policy 2020. He also launched multiple initiatives in the education sector.

தேசிய கல்விக்கொள்கை 2020, முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், கல்வியாளர்களிடம் பிரதமர் உரை

July 29th, 05:50 pm

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் ஒராண்டு நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு கொள்கைகளை உருவாக்கியவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். கல்வித்துறையில் பல நடவடிக்கைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.