
எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளின் பட்டியல் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
April 04th, 02:32 pm
ஒவ்வொரு ஆண்டும் பிம்ஸ்டெக் வர்த்தக உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துதல்.
6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 04th, 12:59 pm
இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தாய்லாந்துப் பிரதமர் ஷினவத்ராவுக்கும் தாய்லாந்து அரசுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்லாந்தில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
April 04th, 12:54 pm
தாய்லாந்தில் இன்று நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது என்பதாகும். தலைவர்களின் முன்னுரிமைகளையும், பிம்ஸ்டெக் பிராந்திய மக்களின் விருப்பங்களையும், உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் தருணத்தில் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வளர்ச்சியை உறுதி செய்வதில் பிம்ஸ்டெக்கின் முயற்சிகளையும் இது பிரதிபலிக்கிறது.குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
March 19th, 04:05 pm
குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை
March 12th, 02:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை
March 12th, 12:30 pm
மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 11:00 am
ஐடிவி நெட்வொர்க் நிறுவனரும் நாடாளுமன்றத்தில் எனது சகாவுமான கார்த்திகேய சர்மா அவர்களே, இந்த நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த குழுவினரே, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களே, தாய்மார்களே வணக்கம். நியூஸ் எக்ஸ் வேர்ல்டின் மங்களகரமான தொடக்கத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இன்று, இந்தி, ஆங்கிலம் உட்பட உங்கள் நெட்வொர்க்கின் அனைத்து பிராந்திய அலைவரிசைகளும் உலக அளவில் செல்கின்றன.என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
March 01st, 10:34 am
கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.கூட்டறிக்கை: இந்திய-ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் புதுதில்லியில் இன்று (28.02.2025) நடைபெற்றது
February 28th, 06:25 pm
இந்தியா - ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப குழுமத்தின் 2-வது கூட்டம் இன்று (2025 பிப்ரவரி 28-ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஐரோப்பிய யூனியன் சார்பில் தொழில்நுட்ப இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான நிர்வாக துணைத் தலைவர் திருமதி ஹென்னா விர்க்குனென், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான ஆணையர் திருமதி எகடெரினா ஜஹாரிவா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள்
February 12th, 12:45 am
இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை
February 11th, 03:15 pm
உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்
February 11th, 03:00 pm
பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
January 25th, 01:00 pm
இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.The Genome India Project marks a defining moment in the country's biotechnology landscape: PM
January 09th, 06:38 pm
PM Modi delivered his remarks at the start of the Genome India Project. “Genome India Project is an important milestone in the biotechnology revolution”, exclaimed Shri Modi. He noted that this project has successfully created a perse genetic resource by sequencing the genomes of 10,000 inpiduals from various populations.ஜீனோம்இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை
January 09th, 05:53 pm
ஜீனோம்இந்தியா திட்டத்தை இன்று தொடங்கி வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆராய்ச்சித் துறையில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க அடியை இன்று எடுத்து வைத்துள்ளது என்று கூறினார். ஜீனோம்இந்தியா திட்டத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கோவிட் பெருந்தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு இடையிலும் நமது விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் பணியாற்றி திட்டத்தை முடித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆராய்ச்சியில் ஐஐஎஸ்சி, ஐஐடி, சிஎஸ்ஐஆர் மற்றும் டிபிடி-பிரிக் போன்ற 20-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். 10,000 இந்தியர்களின் மரபணு வரிசைகள் அடங்கிய தகவல்கள் தற்போது இந்திய உயிரியல் தரவு மையத்தில் உள்ளன என்றும் அவர் கூறினார். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு மோடி, இத்திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.கயானா அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை
November 21st, 04:23 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்: