நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 22nd, 10:50 pm

அமைச்சர் திரு வின்ஃப்ரைட் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது நண்பர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள அனைத்து மதிப்புமிக்க தாய்மார்களே!

நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

November 22nd, 09:00 pm

ஜெர்மனி ஸ்டட்கார்ட் நகரில் நடைபெற்ற நியூஸ் 9 உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த உச்சிமாநாடு இந்திய-ஜெர்மன் கூட்டாண்மைக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது என்று கூறினார். இன்றைய தகவல் யுகத்தில் ஜெர்மனி மற்றும் ஜெர்மன் மக்களுடன் தொடர்பு கொள்ள இந்தியாவில் இருந்து ஒரு ஊடகக் குழு முயற்சிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெர்மனியையும், ஜெர்மனி மக்களையும் இந்திய மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு தளத்தை வழங்கும்”, என்று கூறினார்.

டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

November 21st, 09:29 pm

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாக அளித்த கூட்டறிக்கையை பல ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள் அங்கீகரித்தன

November 20th, 07:52 am

டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.

7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை

October 25th, 08:28 pm

புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

ஜெர்மன் வர்த்தக அமைப்புகளின் 18-வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

October 25th, 11:20 am

இந்தியா,ஜெர்மனி மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளின் தொழில்துறை முன்னோடிகளே,

என்டீடிவி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

October 21st, 10:25 am

கடந்த 4-5 ஆண்டுகளை நாம் பார்த்தால், ஒரு பொதுவான கருப்பொருள் பெரும்பாலான விவாதங்களில் மையமாக உள்ளது. கவலை - எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கொரோனா காலத்தில், உலகளாவிய தொற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்ற கவலை இருந்தது. கோவிட் பரவியதால், உலகப் பொருளாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்தன. தொற்றுநோயானது பணவீக்கம், வேலையின்மை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய கவலைகளை அதிகரித்தது. பின்னர், ஏற்பட்ட போர்கள் விவாதங்களையும் கவலைகளையும் தீவிரப்படுத்தின. உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் அப்பாவி உயிர்களின் இழப்பு குறித்து கவலை இருந்தது. இந்தப் பதட்டங்கள், மோதல்கள் மற்றும் அழுத்தங்கள் உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகளாக மாறின. உலகளாவிய இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.

புதுதில்லியில் என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 21st, 10:16 am

புதுதில்லியில் இன்று என்டிடிவி உலக உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரமுகர்களையும் வரவேற்றதுடன், உலகளாவிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னோடிகள் தத்தமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை -2024, தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 15th, 10:05 am

எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,

புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

October 15th, 10:00 am

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

பிரதமர் தலைமையில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேசை கூட்டம்

September 10th, 08:10 pm

இந்த சந்திப்பின் போது, அவர்களின் யோசனைகள், வர்த்தகத்தை வடிவமைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று பிரதமர் கூறினார். வரும் காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், குறைக்கடத்தி என்பது டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையாகும் என்றும், நமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட குறைக்கடத்தி தொழில்துறை அடித்தளமாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறினார்.

போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 21st, 11:45 pm

இந்த காட்சி உண்மையிலேயே அற்புதமானது. உங்கள் உற்சாகம் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இங்கு காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து நீங்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் போலந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டவர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இந்தியத்தன்மை என்ற உணர்வால் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கு ஒரு அற்புதமான வரவேற்பை அளித்துள்ளீர்கள். இந்த வரவேற்புக்காக உங்கள் அனைவருக்கும், போலந்து மக்களுக்கும் நான் நன்றி கூறிகிறேன்.

PM Modi addresses Indian community in Warsaw, Poland

August 21st, 11:30 pm

Prime Minister Narendra Modi addressed the Indian Diaspora in Warsaw, Poland. The PM expressed that India's current global strategy emphasizes building strong international relationships and fostering peace. India’s approach has shifted to actively engaging with each nation. The focus is on enhancing global cooperation and leveraging India’s historical values of unity and compassion.

Our Sankalp Patra is a reflection of the young aspirations of Yuva Bharat: PM Modi at BJP HQ

April 14th, 09:02 am

Releasing the BJP Sankalp Patra at Party headquarters today, PM Modi stated, The entire nation eagerly awaits the BJP's manifesto. There is a significant reason for this. Over the past 10 years, the BJP has implemented every point of its manifesto as a guarantee. The BJP has once again demonstrated the integrity of its manifesto. Our Sankalp Patra empowers 4 strong pillars of developed India - Youth, women, poor and farmers.”

PM Modi delivers key address during BJP Sankalp Patra Release at Party HQ

April 14th, 09:01 am

Releasing the BJP Sankalp Patra at Party headquarters today, PM Modi stated, The entire nation eagerly awaits the BJP's manifesto. There is a significant reason for this. Over the past 10 years, the BJP has implemented every point of its manifesto as a guarantee. The BJP has once again demonstrated the integrity of its manifesto. Our Sankalp Patra empowers 4 strong pillars of developed India - Youth, women, poor and farmers.”

PM Modi’s Candid Conversation with Bill Gates

March 29th, 06:59 pm

Prime Minister Narendra Modi and Bill Gates came together for an engaging and insightful exchange. The conversation spanned a range of topics, including the future of Artificial Intelligence, the importance of Digital Public Infrastructure, and vaccination programs in India.

ஹரியானா மாநிலம் குருகிராமில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 11th, 01:30 pm

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் சகாக்கள் நிதின் கட்கரி அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷண் பால் குர்ஜார் அவர்களே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

பல்வேறு மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

March 11th, 01:10 pm

நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 13th, 11:19 pm

இன்று நீங்கள் அபுதாபியில் வரலாறு படைத்துள்ளீர்கள். நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளீர்கள். ஆனால் அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்று மைதானத்தில் உள்ள ஒவ்வொரு இதயத் துடிப்பும் பாரத்-ஐக்கிய அரபு அமீரகம் நட்பு வாழ்க! என்று சொல்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய வணக்கம் மோடி நிகழ்ச்சியில் பிரதமரின் கலந்துரையாடல்

February 13th, 08:30 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'வணக்கம் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் 7 அமீரகங்கள் முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவளியினரும், அனைத்து சமூகங்களை சேர்ந்த இந்தியர்களும் பங்கேற்றனர்.