டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
January 01st, 03:28 pm
விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.உர மானியத்தை உயர்த்தும் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் நல முடிவை அரசு எடுத்துள்ளது
May 19th, 07:57 pm
உர விலைகள் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். உர விலைகள் குறித்த விரிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது.