
The trinity of Talent, Temperament and Technology will transform India's future: PM Modi in YUGM Innovation Conclave
April 29th, 11:01 am
PM Modi while addressing the YUGM Innovation Conclave at Bharat Mandapam, hailed the confluence of government, academia, and industry as a powerful force shaping India’s deep-tech future. He lauded AI super hubs at IITs, the Wadhwani Innovation Network, and transformative education reforms, reaffirming India’s resolve to empower youth and lead in science, research, and innovation.
ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
April 29th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் ஒய்.யு.ஜி.எம் என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.
இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 24th, 02:00 pm
மதிப்பிற்குரிய விருந்தினர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்துறை தலைவர்களே, சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் எனது நண்பர்களே, வணக்கம். இன்றும், அடுத்த இரண்டு நாட்களிலும், பாரதத்தின் வளர்ந்து வரும் துறையான எஃகுத் துறையின் திறன்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்களில் ஈடுபட உள்ளோம். இந்தத் துறை, பாரதத்தின் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குவதுடன், 'வளர்ந்த இந்தியா’ என்பதற்கான வலுவான அடித்தளமாகவும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதும் துறையாகவும் திகழ்கிறது. இந்தியா ஸ்டீல் 2025-க்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதுமையை ஊக்குவிக்கவும் ஒரு புதிய தொடக்க தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இது எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 24th, 01:30 pm
மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அடுத்த இரண்டு நாட்களில், நாட்டின் முன்னோடித் துறையான எஃகுத் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் உள்ளதையுமா அதனை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறினார். எஃகு உற்பத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளம் அமைக்கிறது என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது என்றும், நாட்டில் மாற்றத்திற்கான புதிய அத்தியாயத்தை எழுதுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா ஸ்டீல் 2025 கண்காட்சிக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி எஃகுத் துறையில் புதிய அத்தியாயத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 24th, 12:00 pm
நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன், நீங்கள் எங்கிருந்தாலும், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் இடத்தில் அமர்ந்து, 22 ஆம் தேதி நாம் இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி, அந்தந்த தெய்வங்களை நினைவுகூர்வோம். அவர்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம், அதன் பிறகு நான் இன்று எனது உரையைத் தொடங்குவேன்.தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
April 24th, 11:50 am
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் இன்று ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 22-ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும் மிதிலா மற்றும் பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சாரம், ரயில்வே, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் இம்மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாபெரும் கவிஞராகவும் தேசிய அடையாளமாகவும் திகழ்ந்த ராம்தாரி சிங் தினகர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்
April 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 24-ம் தேதி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
April 22nd, 08:30 am
பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறேன்.17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 21st, 11:30 am
எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
April 21st, 11:00 am
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
April 19th, 01:16 pm
17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 21 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளையும் அவர் வழங்குவார்.தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
April 17th, 08:05 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே ஃபிரடெரிக்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்
April 15th, 06:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் டென்மார்க் பிரதமர் திருமதி மெட்டே பிரடெரிக்சனும் இன்று (15.04.2025) தொலைபேசிவழி உரையாடினர். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், உலகளாவிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
April 14th, 12:00 pm
ஹரியானாவின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு. நயப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மனோகர் லால் அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷ்ண பால் அவர்களே, ஹரியானா அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே. வாழ்த்துக்கள்.ஹரியானா மாநிலம் யமுனா நகரில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
April 14th, 11:54 am
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். ஹரியானா மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஹரியானாவின் புனித பூமிக்கு மரியாதை செலுத்தினார், இது அன்னை சரஸ்வதியின் தோற்றம், மந்திரதேவியின் இருப்பிடம், பஞ்சமுகி ஹனுமான் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கபால்மோச்சன் சாஹிப் ஆகியோரின் இருப்பிடம் என்று அவர் கூறினார். ஹரியானா கலாச்சாரம், பக்தி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சங்கமம் என்று அவர் விவரித்தார். பாபாசாஹேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், பாபா சாகேப்பின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை எடுத்துரைத்து, அவை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.திரு. ஹரிஷ்பாய் நாயக் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
April 12th, 02:30 pm
ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் மூத்த பிரச்சாரகரான திரு. ஹரிஷ்பாய் நாயக் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சேவை நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான பணிகளில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும் என்று திரு மோடி கூறியுள்ளார்.வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 11th, 11:00 am
மேடையில் அமர்ந்துள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக்; மதிப்பிற்குரிய அமைச்சர்களே வணக்கம். தங்கள் ஆசீர்வாதங்களை வழங்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனது அன்பான குடும்ப உறுப்பினர்களான நமது காசி குடும்பத்தின் அன்புக்குரிய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் ஆசீர்வாதங்களை நான் தாழ்மையுடன் கோருகிறேன். இந்த அபரிமிதமான அன்புக்கு நான் உண்மையிலேயே கடன்பட்டிருக்கிறேன். காசி என்னுடையது, நான் காசியைச் சேர்ந்தவன்.உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்
April 11th, 10:49 am
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர் காசியுடன் தமது ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார். தமக்கு ஆசி வழங்கியதற்காக அவர் தமது குடும்பத்தினருக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும்உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
April 09th, 09:43 pm
உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும் ஏப்ரல் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 11 அன்று காலை 11.00 மணிக்கு வாரணாசி செல்லும் அவர், ரூ.3880 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.நவ்கார் மகாமந்திர தினத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 09th, 08:15 am
மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.