தான்சானியா அதிபரின் இந்திய பயணம் மற்றும் இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான உத்திசார் கூட்டு ஒத்துழைப்பின் தொடக்கம் குறித்த கூட்டறிக்கை

October 09th, 06:57 pm

இந்தியக் குடியரசின் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில், தான்சானியா ஐக்கியக் குடியரசின் அதிபர் சாமியா சுலுஹு ஹசன் 2023 அக்டோபர் 8 முதல் 10 வரை இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் சமியா சுலுஹு ஹசனுடன் அந்நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் தான்சானியா வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவும் வந்தது.