75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

August 15th, 03:02 pm

இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.

75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை

August 15th, 07:38 am

75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது

August 15th, 07:37 am

நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.

வாரணாசியில் 2019 தேசிய மகளிர் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

March 08th, 11:00 am

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்திரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்ட்கலா சங்குலில் நடைபெற்ற, 2019 தேசிய பெண்கள் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

நாடெங்கிலும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வழியாக உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

July 12th, 10:30 am

நாடெங்கிலும் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடினார். பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர். பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளோடு காணொலி காட்சி வழியாக பிரதமர் நடத்தும் கலந்துரையாடல் தொடரில் இது 9-வது நிகழ்ச்சியாகும்.

நாடெங்கிலும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

July 12th, 10:30 am

நாடெங்கிலும் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் பயனாளிகளோடு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடினார். பல்வேறு சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த உரையாடலில் பங்கேற்றனர். பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளோடு காணொலி காட்சி வழியாக பிரதமர் நடத்தும் கலந்துரையாடல் தொடரில் இது 9-வது நிகழ்ச்சியாகும்.

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

April 21st, 11:01 pm

ஜனநாயகம் என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல, அது மக்கள் கூட்டணியின் ஒரு பகுதியாகும்: பிரதமர் மோடி

குடிமைப் பணி தினத்தையொட்டி குடிமைப் பணி அதிகாரிகளிடையே பிரதமர் ஆற்றிய உரை

April 21st, 05:45 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி தினத்தையொட்டி அதிகாரிகளிடையே இன்று உரை நிகழ்த்தினார். பாராட்டு, மதிப்பீடு, சுயபரிசோதனை ஆகியவற்றுக்கான நேரம் இது என்றும் பிரதமர் விருது என்பது அரசு அதிகாரிகளுக்கு ஊக்கமளிப்பதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறினார். விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். அரசின் முன்னுரிமைகளை சுட்டிக் காட்டும் வகையில் இந்த விருதுகள் அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.