டாமனில் நமோ பாதை, தேவகா கடல்முனை ஆகியவற்றை நாட்டிற்கு பிரதமர் அர்ப்பணித்தார்

April 25th, 11:23 pm

5.45 கிலோமீட்டர் தூரம் கொண்ட தேவகா கடல்முனை ரூ. 165 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு தலமாகவும், சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரித்து, அதன் மூலம் இந்த கடல்முனை உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்மிகு விளக்குகள், வாகன நிறுத்தும் வசதி, பூங்காக்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை நிறைந்த உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக இந்த கடற்கரை முகப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Balanced development of every region is a huge priority: PM Modi

April 25th, 04:50 pm

PM Modi laid the foundation stone and dedicated to the nation various development projects worth more than Rs 4850 crores at Silvassa, Dadra, and Nagar Haveli today. The projects included the dedication of NAMO Medical Education & Research Institute in Silvassa, and the laying of the foundation stone of 96 projects

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்

April 25th, 04:49 pm

தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். சில்வாசாவின் நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை அர்ப்பணித்ததும் டாமனில் அரசுப் பள்ளிகள், அரசு பொறியியல் கல்லூரி போன்ற 96 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், மற்ற சில பகுதிகளில் பல்வேறு சாலைகளை அழகுபடுத்துதல், வலுப்படுத்துதல், விரிவாக்குதல், மீன் சந்தை, வணிக வளாகம், குடிநீர் விநியோக மேம்பாடும் இந்த திட்டங்களில் அடங்கும். டியூ மற்றும் சில்வாசாவைச் சேர்ந்த, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுக்கு சாவிகளை பிரதமர் ஒப்படைத்தார்.

மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவுக்கு வரும் 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் செல்கிறார்

April 21st, 03:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 24, 25ந் தேதிகளில் மத்தியப் பிரதேசம், கேரளா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுக்கு செல்கிறார்.

டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த டுவிட்டர் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 07th, 11:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, டையூவின் கடலோரத் தூய்மை மற்றும் மேம்பாடு குறித்த பதிவைப் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

வேலை வாய்ப்பு விழாவின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 22nd, 10:31 am

வேலை வாய்ப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள எனது இளம் நண்பர்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்று 71,000 இளைஞர்களுக்கு நாட்டின் 45 நகரங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இல்லங்களில் முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் இன்று தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு 75,000 இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்.

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் விநியோகித்தார்

November 22nd, 10:30 am

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

கோவாவின் பனாஜியில் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி வாயிலாக பிரதமரின் உரை

August 19th, 04:51 pm

கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, கோவா அரசின் இதர அமைச்சர்களே, பெருமக்களே, தாய்மார்களே மற்றும் அன்பர்களே. இன்று மிகவும் முக்கியமான மற்றும் புனித தினம். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களுக்கு வாழ்த்துகள்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

August 19th, 12:12 pm

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வு கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவாந்த், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஜென்மாஷ்டமி நன்னாளில் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

PM speaks to CMs of Maharashtra & Gujarat regarding cyclone situation

June 02nd, 07:45 pm

The Prime Minister, Shri Narendra Modi has spoken to Chief Minister of Maharashtra Shri Uddhav Thackeray, Chief Minister of Gujarat Shri Vijay Rupani and Administrator of Daman Diu, Dadra and Nagar Haveli Shri Praful K Patel regarding the cyclone situation. He assured all possible support and assistance from the Centre.

சமூக வலைதள மூலை 24 பிப்ரவரி 2018

February 24th, 08:14 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

டாமன் மற்றும் டையூவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பிரதமரின் உரை

February 24th, 02:09 pm

டாமனில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில் டாமனின் உள்ளார்ந்த கலாச்சாரம் குறித்துப் பெருமிதத்தை தெரிவித்தார். டாமன் ஒரு குட்டி இந்தியாவாக மாறியுள்ளதாகவும், இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருவதுடன், பணியாற்றியும்வருவதைச்சுட்டிக்காட்டினார். மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய பிரதமர், மீனவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற உறுதியின் காரணமாக, “நீலப்புரட்சி”யில் தாம் முழுக்கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

டாமன் மற்றும் டையூ-வில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

February 24th, 02:01 pm

ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டங்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்குச்சான்றிதழ்களைவழங்கிய அவர், டாமன் கல்லூரி திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார்.

இரு மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களில் 2 நாட்கள் பிரதமர் பயணம்

February 23rd, 04:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தமிழ்நாடு புதுச்சேரி உள்பட இரண்டு மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்களுக்கு இரு நாள் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும், டாமன் டையூ, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.