ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சிக்கு அற்புதமான சூழலை அளித்தது: பிரதமர்
June 21st, 02:22 pm
இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சியின் சில அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், யோகா பயிற்சியாளர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 21st, 12:58 pm
இன்று, இந்த காட்சி ஒட்டுமொத்த உலகின் மனதிலும் அழியாத ஒன்றாகும். மழை பெய்யாமல் இருந்திருந்தால், மழை பெய்த அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்காது. மேலும் ஸ்ரீநகரில் மழை பெய்யும்போது, குளிரும் அதிகரிக்கிறது. நானே ஸ்வெட்டர் அணிய வேண்டியிருந்தது. நீங்கள் இங்கிருந்து வந்தவர்கள், நீங்கள் அதற்கு பழக்கப்பட்டவர்கள், இது உங்களுக்கு சிரமமான விஷயமல்ல. இருப்பினும், மழை காரணமாக, சிறிது தாமதம் ஏற்பட்டது, நாங்கள் அதை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், தனக்கும் சமூகத்திற்கும் யோகாவின் முக்கியத்துவத்தையும், யோகா எவ்வாறு வாழ்க்கையின் இயல்பான பகுதியாக மாற முடியும் என்பதையும் உலக சமூகம் புரிந்துகொண்டுள்ளது. பல் துலக்குவதும், தலை சீவுவதும் வழக்கமான நடைமுறையாகிவிட்டதைப் போலவே, யோகா அதே எளிதாக வாழ்க்கையில் ஒருங்கிணைக்கும்போது, அது ஒவ்வொரு கணமும் நன்மைகளை வழங்குகிறது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினம் 2024-ஐ முன்னிட்டு தால் ஏரியில் யோகா பயிற்சி மேற்கொண்டவர்களிடையே பிரதமர் உரை
June 21st, 11:50 am
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தால் ஏரியில், ஸ்ரீநகர் மக்களிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர்
June 21st, 11:44 am
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 07:00 pm
இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை
June 20th, 06:30 pm
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.தால் ஏரியில் இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாமை நடத்திய இந்திய அஞ்சலகக் கட்டண வங்கிக்கு பிரதமர் பாராட்டு
November 05th, 11:49 am
நிவேஷக் தீதீ முன்முயற்சியின் கீழ் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் இந்தியாவின் முதலாவது மிதவை நிதி எழுத்தறிவு முகாமை நடத்திய இந்திய அஞ்சலகக் கட்டண வங்கிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் அழகு மற்றும் விருந்தோம்பல் குறித்த மக்களின் கருத்துக்களை பிரதமர் பகிர்வு
October 08th, 10:06 pm
பைசாரன், அரு, கோகர்நாக், அச்பால், குல்மார்க், ஸ்ரீநகர் மற்றும் தால் ஏரியின் அழகைக் குறிப்பிட்டு ஜம்மு காஷ்மீரின் அழகு மற்றும் விருந்தோம்பல் குறித்த நாட்டு மக்களின் கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.