பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து கவலை தெரிவித்துள்ளார் பிரதமர்

December 17th, 05:19 pm

பிரான்சின் மயோட்டே நகரில் சிடோ புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்சுடன் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்றும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் தலைமையின் கீழ், பிரான்ஸ் இந்த துயரத்தை உறுதியுடன் சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 11th, 05:00 pm

செங்கோட்டையில் இருந்து ஒரு விஷயத்தை நான் எப்போதும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சியும் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன். இன்றைய பாரதம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் மூலமே துரித வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும். இந்த கொள்கைக்கு இன்று ஒரு உதாரணம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இருக்கும் போதெல்லாம், புதிய நுண்ணறிவுகளைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு 21+ம் நூற்றாண்டு பாரதத்தைப் பார்ப்பதில் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் உள்ளது. அதனால்தான் உங்கள் தீர்வுகளும் தனித்துவமானவைகளாக இருக்கின்றன. இப்போது, இந்த ஹேக்கத்தானில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் என்ன பணியாற்றி வருகின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே, ஆரம்பிக்கலாம்!

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்

December 11th, 04:30 pm

நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024-இன் பிரமாண்ட நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரைகளில் 'அனைவரும் இணைவோம்' என்ற நடைமுறையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார். நவீன இந்தியா ஹேக்கத்தானின் மாபெரும் இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன் என்று கூறிய பிரதமர், இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் தான் இருக்கும்போது, புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தாம் அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவை வித்தியாசமாகப் பார்க்கும் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எனவே, உங்கள் தீர்வுகளும் வேறுபட்டவை, ஒரு புதிய சவால் வரும்போது, நீங்கள் புதிய மற்றும் தனித்துவமான தீர்வுகளைக் கொண்டு வருகிறீர்கள் என்று திரு மோடி கூறினார். கடந்த காலத்தில் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த பிரதமர், ஹேக்கத்தான் போட்டிகளின் வெளியீடு குறித்து தான் ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை என்றார். நீங்கள் எனது நம்பிக்கையை நீங்கள் வலுப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறிய அவர், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்வுகள் பல்வேறு அமைச்சகங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Cabinet Approves Mission Mausam for Advanced Weather and Climate Services

September 11th, 08:19 pm

The Union Cabinet, led by PM Modi, has approved Mission Mausam with a Rs. 2,000 crore outlay to enhance India's weather science, forecasting, and climate resilience. The initiative will use cutting-edge technologies like AI, advanced radars, and high-performance computing to improve weather predictions and benefit sectors like agriculture, disaster management, and transport.

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 30th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்கள் அனைவரையும் மனம் நிறைய வரவேற்கிறேன். ஜூலை மாதம், மழைக்காலம் ஆகும், அதாவது பருவமழைக்காலம். கடந்த சில நாட்களாகவே, இயற்கைச் சீற்றங்கள் காரணமாக, கவலையும், இடர்களும் நிறைந்திருந்தன. யமுனை உட்பட, பல நதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பட இடங்களில் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் நிலநடுக்கச் சம்பவங்களும் நடந்தன. இதற்கிடையில் தேசத்தின் மேற்குப் பகுதியில் சில காலம் முன்பாக குஜராத்தின் பகுதிகளில், விபர்ஜாய் சூறாவளியும் வந்தது. ஆனால் நண்பர்களே, இந்தப் பேரிடர்களுக்கு இடையிலே, தேசத்தின் மக்களனைவரும், சமூகரீதியான முயற்சிகளின் பலம் என்ன என்பதைக் காட்டியிருக்கிறார்கள். வட்டார மக்கள், நமது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் என அனைவரும் இரவுபகலாகத் தொடர்ந்து செயலாற்றி இந்தப் பேரிடர்களை எதிர்கொண்டார்கள். எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தையும் எதிர்கொள்வதில் நமது திறன்களூம் ஆதாரங்களும் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் இதோடு கூடவே, நமது சகிப்புத்தன்மையும், ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வும், அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைவருக்கும் நலன் என்ற இந்த உணர்வு தான் பாரதத்தின் அடையாளம், இதுவே பாரத நாட்டின் சக்தியும் ஆகும்.

‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

June 12th, 04:23 pm

‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக மத்திய அமைச்சகங்கள், அமைப்புகள், குஜராத் அரசின் அமைச்சகம் மற்றும் அமைப்புகளின் தயார் நிலை குறித்த உயர்நிலைக்குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய பட்ஜெட் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை

January 23rd, 05:24 pm

Prime Minister Narendra Modi paid tribute to Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary. Addressing the gathering, he said, The grand statue of Netaji, who had established the first independent government on the soil of India, and who gave us the confidence of achieving a sovereign and strong India, is being installed in digital form near India Gate. Soon this hologram statue will be replaced by a granite statue.

நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திறந்து வைத்தார்

January 23rd, 05:23 pm

நேதாஜியின் மின்னொளி வடிவிலான உருவச்சிலையை இந்தியாவின் நுழைவாயிலில் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜியின் உருவச்சிலைப் பணிகள் நிறைவடையும் வரை மின்னொளி வடிவிலான இந்தச் சிலை இங்கு வைக்கப்பட்டிருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்தநாளையொட்டி ஓராண்டு நடைபெற உள்ள நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஒடிசா முதல்வருடன் புயல் நிலவரம் குறித்து பிரதமர் ஆலோசனை

September 26th, 06:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

குலாப் புயல் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வருடன் பிரதமர் பேச்சு

September 26th, 03:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் உரையாடி குலாப் புயலினால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் உறுதி தெரிவித்தார்.

கோவாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட் தடுப்பூசி பயனாளிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

September 18th, 10:31 am

ஆற்றல் மிக்க மற்றும் பிரபலமான கோவா முதல்வர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, என்னுடன் பணியாற்றும் மத்திய அமைச்சரும், கோவாவின் புதல்வருமான ஸ்ரீபத் நாயக் அவர்களே, மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் அவர்களே, கோவா அமைச்சர்களே, எம்.பி.க்களே மற்றும் எம்.எல்ஏ.க்களே, சகோதர, சகோதரிகளே!

கோவாவில் கோவிட் தடுப்பூசி பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

September 18th, 10:30 am

கோவாவில் வயது வந்தோர் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து, பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.

PM's remarks at the UNSC High-Level Open Debate on “Enhancing Maritime Security: A Case For International Cooperation”

August 09th, 05:41 pm

Chairing a high-level United Nations Security Council open debate, Prime Minister Narendra Modi put forward five principles, including removing barriers for maritime trade and peaceful settlement of disputes, on the basis of which a global roadmap for maritime security cooperation can be prepared.

கடந்த 7 ஆண்டுகளில், நாம் அனைவரும் 'டீம் இந்தியா'வாக பணியாற்றினோம்: ‘மன் கீ பாதி’-ன் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

May 30th, 11:30 am

தினேஷ் ஜி – ஐயா எங்களுக்கு எது பத்தின கவலையும் இருக்காது. எங்க சிந்தை எல்லாம் செய்யற வேலையில மட்டுமே கருத்தா இருக்கும், நேரத்துக்குள்ள நம்ம ஆக்சிஜனைக் கொண்டு சேர்த்து, அதனால யாருடைய உயிராவது காப்பாத்தப்படுதுன்னா, இதுவே எங்களுக்குப் பெரிய கௌரவமான விஷயங்கய்யா.

யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் ஆய்வு செய்தார்

May 28th, 03:56 pm

யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மே 28ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

யாஸ் புயலின் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மே 28 அன்று பிரதமர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு பயணம்

May 27th, 04:07 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021, மே 28 அன்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த இரு மாநிலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகிப்பார்.

யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் ஆய்வு செய்தார்

May 27th, 04:02 pm

யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மே 28ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

May 23rd, 01:43 pm

யாஸ் புயலை எதிர்கொள்வதற்கான மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/ சம்பந்தப்பட்ட முகமைகளின் தயார்நிலை மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

‘டவ்-தே’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் கூட்டினார்

May 15th, 06:54 pm

‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சகங்கள்/முகமைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டினார்.

Come May 2, West Bengal will have a double engine government that will give double and direct benefit to the people: PM

April 03rd, 03:01 pm

Continuing his poll campaign before the third phase of assembly election in West Bengal, PM Modi has addressed a mega rally in Tarakeshwar. He said, “We have seen a glimpse of what results are going to come on 2 May in Nandigram two days ago. I know for sure, with every step of the election, Didi’s panic will increase, her shower of abuse on me will also grow.”