இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.சண்டிகரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
December 02nd, 07:05 pm
இந்திய நியாயச்சட்டம், இந்திய சிவில் உரிமைப் பாதுகாப்பு சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதை பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 3, அன்று நண்பகல் 12 மணிக்கு சண்டிகரில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறைத் தலைவர்களின் 59-வது அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
December 01st, 07:49 pm
நிறைவு விழாவில், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்களை புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கினார். தமது நிறைவுரையில், பாதுகாப்பு சவால்களின் தேசிய மற்றும் சர்வதேச பரிமாணங்கள் குறித்து மாநாட்டின் போது விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், விவாதங்களிலிருந்து வெளிப்பட்ட எதிர் உத்திகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.இன்று, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
October 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே வணக்கம். இன்றைய மனதின் குரலில் உங்கள் அனைவருக்கும் நல்வரவேற்பு. உங்கள் வாழ்க்கையின் மிகவும் நினைவில் கொள்ளத்தக்க கணம் என்ன என்று நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், அப்படி ஏராளமாக இருக்கின்றன என்றாலும், இவை அனைத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட கணம் மிகவும் விசேஷமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் பிறந்த இடமான ஜார்க்கண்டின் உலிஹாதூ கிராமத்திற்கு நான் சென்ற கணம் தான் அது. இந்தப் பயணம் எனக்குள்ளே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பவித்திரமான இந்த பூமியின் மண்ணை என் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பெரும்பேறு கிடைத்த, தேசத்தின் முதல் பிரதமர் என்ற சௌபாக்கியம் எனக்கு வாய்க்கப்பெற்றது. அந்தக் கணத்தில் சுதந்திரப் போராட்ட்த்தின் சக்தியை மட்டும் நான் உணரவில்லை, இந்த மண்ணின் சக்தியோடு என்னை நானே இணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. மேற்கொண்ட ஒரு உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வல்லமை இருந்தால், எப்படி அதனால் தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன்.7வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் குறித்த கூட்டறிக்கை
October 25th, 08:28 pm
புது தில்லியில் 2024, அக்டோபர் 25 அன்று நடைபெற்ற இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (7வது ஐஜிசி) ஏழாவது சுற்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மன் பிரதமர் திரு ஓலஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இந்தியத் தரப்பில் பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறைகளின் அமைச்சர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (இணையமைச்சர்) மற்றும் திறன் மேம்பாடு (இணையமைச்சர்) ஆகியோரும் ஜெர்மன் தரப்பில் பொருளாதார விவகாரங்கள் மற்றும் பருவநிலை நடவடிக்கை, வெளியுறவு, தொழிலாளர் நலன் மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் அமைச்சர்களும் மற்றும் நிதி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, அணுசக்தி பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் க்கான நாடாளுமன்ற செயலாளர்களும் இருதரப்பு மூத்த அதிகாரிகளும் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 03:25 pm
இன்றைய கூட்டத்தை அற்புதமாக ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
October 23rd, 03:10 pm
கசான் நகரில் ரஷ்யா தலைமையில் இன்று நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை -2024, தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 15th, 10:05 am
எனது அமைச்சரவை சகாவான ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, ஐடியு-வின் பொதுச் செயலாளர் சந்திரசேகர் அவர்களே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களே, பாரதத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, தொழில்துறைத் தலைவர்களே, தொலைத் தொடர்பு நிபுணர்களே, புத்தொழில் உலகின் இளம் தொழில்முனைவோரே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே,புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
October 15th, 10:00 am
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8 வது பதிப்பையும் திரு மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 14th, 05:31 pm
அக்டோபர் 15-ம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை (WTSA) 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை
October 10th, 05:42 pm
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
October 04th, 06:43 pm
இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04-10.2024) கலந்துரையாடினார்.Success of Humanity lies in our collective strength, not in the battlefield: PM Modi at UN Summit
September 23rd, 09:32 pm
Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.Prime Minister’s Address at the ‘Summit of the Future’
September 23rd, 09:12 pm
Prime Minister Narendra Modi addressed the 'Summit of the Future' at the United Nations in New York, advocating for a human-centric approach to global peace, development, and prosperity. He highlighted India's success in lifting 250 million people out of poverty, expressed solidarity with the Global South, and called for balanced tech regulations. He also emphasized the need for UN Security Council reforms to meet global ambitions.Fact Sheet: 2024 Quad Leaders’ Summit
September 22nd, 12:06 pm
President Biden hosted the fourth Quad Leaders’ Summit with leaders from Australia, Japan, and India in Wilmington, Delaware. The Quad continues to be a global force for good, delivering projects across the Indo-Pacific to address pandemics, natural disasters, maritime security, infrastructure, technology, and climate change. The leaders announced new initiatives to deepen cooperation and ensure long-term impact, with commitments to secure robust funding and promote interparliamentary exchanges. Quad Commerce and Industry ministers are set to meet for the first time in the coming months.Joint Fact Sheet: The United States and India Continue to Expand Comprehensive and Global Strategic Partnership
September 22nd, 12:00 pm
President Biden and PM Modi reaffirmed the U.S.-India Comprehensive Global and Strategic Partnership, highlighting unprecedented levels of trust and collaboration. They emphasized shared values like democracy, freedom, and human rights, while commending progress in defense cooperation. President Biden praised India's global leadership, including its G-20 role and humanitarian efforts in Ukraine. Both leaders supported India's permanent membership in a reformed U.N. Security Council and underscored the importance of the U.S.-India partnership in building a secure, prosperous, and inclusive future.சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்
September 05th, 09:00 am
நீங்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாம் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேற்றத்தை அடையும் என்று நான் நம்புகிறேன்.India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai
August 30th, 12:00 pm
PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.மகாராஷ்டிராவின், மும்பையில், உலக நிதித் தொழில்நுட்பத் திருவிழா 2024-ல் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
August 30th, 11:15 am
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நிதித் தொழில்நுட்ப திருவிழா(GFF) 2024-ல், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். நிதித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதோடு, இத்துறையுடன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்திய பணப்பட்டுவாடா கவுன்சில், இந்திய தேசிய பணப் பட்டுவாடா கழகம் மற்றும் நிதித் தொழில்நுட்ப சங்கம கவுன்சில் ஆகியவை, இந்த நிதித் தொழில்நுட்பத் திருவிழாவிற்கு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.