இந்திய மற்றும் பிரதமரின் லெவன் கிரிக்கெட் அணியினருடனான ஆஸ்திரேலிய பிரதமரின் சந்திப்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி
November 28th, 07:33 pm
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிரதமரின் லெவன் கிரிக்கெட் அணியினரை இன்று சந்தித்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டித் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.கயானா நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
November 22nd, 05:31 am
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.செயிண்ட் லூசியா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்
November 21st, 10:13 am
இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று செயிண்ட் லூசியா பிரதமர் திரு. பிலிப் ஜே. பியருடன் பயனுள்ள விவாதங்களை நடத்தினார்.இந்தியா-கரிகாம் 2-வது உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்
November 21st, 02:15 am
எனது நண்பர்கள், அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிக்கோன் மிட்செல் ஆகியோருடன் இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கரிகாம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு
November 21st, 02:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல் ஆகியோர் 20 நவம்பர் 2024 அன்று ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினர். இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கயானா அதிபர் இர்பான் அலிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். முதலாவது இந்தியா-கரிகாம் உச்சி மாநாடு, 2019-ல் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் கயானா அதிபர் மற்றும் கிரெனடா பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்:ஜமைக்கா பிரதமர் மேதகு டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னெஸின் இந்திய பயணத்தின் போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
October 01st, 12:30 pm
இந்தியாவுக்கும், ஜமைக்காவுக்கும் இடையே, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஜமைக்கா பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்ஜமைக்கா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
October 01st, 12:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அதனால்தான் இந்தப் பயணத்துக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவின் நீண்டகால நண்பர். அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாட்டை நான் உணர்ந்தேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த கரீபியன் பிராந்தியத்துடனும் நமது ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
September 22nd, 10:00 pm
அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 09:30 pm
நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் திரு. அன்ஷுமன் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
July 31st, 11:59 pm
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான திரு. அன்ஷுமன் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்புக்குப் பிரதமர் பாராட்டு
June 30th, 07:19 pm
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்
June 30th, 02:06 pm
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30-06-2024) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். போட்டியில் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறன்களையும் அவர்களது சிறந்த உணர்வையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
June 29th, 11:56 pm
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடையப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 27th, 12:26 pm
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடனும் திகழவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மனதின் குரல், டிசம்பர் 2023
December 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் பிரதமர் கலந்துரையாடல்
December 24th, 07:28 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று காலை, எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.