இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்

November 01st, 10:40 pm

இந்தியாவின் கோவாக்சினை ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்காக, அந்நாட்டின் பிரதமர் மேன்மை தங்கிய ஸ்காட் மோரிசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

எல்லோரும் தடுப்பூசி போட்டு முழுமையான கவனிப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-ன் போது பிரதமர் மோடி

April 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.

கொவிட்-19 நிலவரம் மற்றும் தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு

January 09th, 05:42 pm

கொவிட்-19 நிலவரம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் இன்று தலைமை தாங்கினார். அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.