பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 20th, 08:05 pm

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.