16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் துவக்க நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 23rd, 05:22 pm
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து புதிய நண்பர்களையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். உலக மனிதகுலத்தில் 40 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 30 சதவீதத்தையும் பிரிக்ஸ் அமைப்பு தனது புதிய வடிவத்தில் கொண்டுள்ளது.உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 09:36 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.மாலத்தீவு அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 09:35 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவை சந்தித்தார்.பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 09:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023 டிசம்பர் 1 அன்று துபாயில் நடைபெற்ற சர்வதேச பருநிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.பருவநிலை நிதியை மாற்றியமைப்பது தொடர்பான சிஓபி-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் பங்கேற்றார்
December 01st, 08:39 pm
இந்த அமர்வின் போது, தலைவர்கள் புதிய உலகளாவிய காலநிலை நிதிக் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர். இந்தப் பிரகடனத்தில் உறுதிமொழிகளை வழங்குதல் மற்றும் லட்சிய விளைவுகளை அடைதல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான சலுகை நிதி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் ஆகிய கூறுகள் அடங்கியுள்ளன.ஸ்வீடன் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 08:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். 2023, 1 டிசம்பர் அன்று, துபாயில் நடந்த சிஓபி 28 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.சர்வதேச பருவநிலை உச்சிமாநாட்டின்போது (சிஓபி-28) இந்தியாவும் ஸ்வீடனும் இணைந்து தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன
December 01st, 08:29 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் 2024-26-ம் ஆண்டிற்கான தொழில்துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழுவின் (லீட் ஐடி 2.0 - LeadIT 2.0) இரண்டாம் கட்ட செயல்பாடுகளை துபாயில் சர்வதேசப் பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி -28) தொடங்கி வைத்தனர்.ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து உலகளாவிய பசுமை கடன் முன்முயற்சியை சிஓபி -28 இல் இந்தியா நடத்தியது
December 01st, 08:28 pm
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இணைந்து 2023, டிசம்பர் 1 அன்று துபாயில் சிஓபி -28 இல் 'பசுமை கடன் திட்டம்' குறித்த உயர் மட்ட நிகழ்வை நடத்தினார்.'காலநிலை நிதியை மாற்றியமைத்தல்' தொடர்பான சி.ஓ.பி-28 தலைமைத்துவ அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 01st, 08:06 pm
ஜி20 மாநாட்டின் கீழ், நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டு தலைப்புகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்துள்ளது.சுவிஸ் கூட்டமைப்பு தலைவருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 08:01 pm
இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மக்களுடனான உறவுகள் உள்ளிட்ட தங்கள் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்.இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 06:44 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2023 டிசம்பர் 1) துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம்: பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டு அறிக்கை
July 15th, 06:36 pm
பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை மதித்து உலகளாவிய கூட்டு செயற்பாட்டின் வாயிலாக பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதன் அவசியத்தை இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானும் வலியுறுத்தி இருக்கிறார்கள். பருவநிலை மாற்றம் சம்பந்தமான லட்சியம், கார்பன் வெளியிட்டைக் குறைப்பது மற்றும் தூய்மையான எரிசக்தி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிபாட்டை தலைவர்கள் முன்வைத்தனர்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-யுஏஇ கூட்டு அறிக்கை
July 15th, 06:31 pm
கடந்த எட்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள ஐந்தாவது பயணம் இது என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றபோது, அபுதாபியில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து தமது வாழ்த்துகளைத் தெரிவிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக அவர் பதவியேற்றார். 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெற்றார். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு வருகை தந்தார், பின்னர் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக இருந்தார். மேலும், 2017 இல் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் இந்தியா வருகையின் போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவு, முறைப்படி ஒரு விரிவான உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டது.CoP28-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுல்தான் அல் ஜாபருடன் பிரதமரின் சந்திப்பு
July 15th, 05:33 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி 2023 ஜூலை 15-ம் தேதியன்று CoP28-ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரும், அபுதாபியில் உள்ள அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் சுல்தான் அல் ஜாபரை சந்தித்தார்.