மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்ட 50-ம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

April 09th, 01:00 pm

இங்கு தாமதமாக வந்துள்ளதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். காலையில் 6 மணியளவில் நான் புறப்பட்டேன். வனப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சரியான நேரத்தில் இங்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன். உங்கள் அனைவரையும் காத்திருக்க வைத்தது குறித்து வருந்துகிறேன்.

கர்நாடகாவின் மைசூருவில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்

April 09th, 12:37 pm

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைக்கழகத்தில் 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ 50-ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச புலிகள் கூட்டமைப்பையும் (ஐபிசிஏ) பிரதமர் தொடங்கி வைத்தார். ”அமிர்த காலத்தில் புலிகளின் பாதுகாப்பு” என்ற புலிகள் காப்பக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டின் 5-வது பருவ அறிக்கைகளை வெளியிட்ட பிரதமர், புலிகளின் எண்ணிக்கையை அறிவித்ததோடு, அகில இந்திய புலிகள் மதிப்பீட்டின் (5வது பருவ) அறிக்கையையும் வெளியிட்டார். புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நினைவு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 28th, 08:06 pm

மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்

August 28th, 05:08 pm

காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் வேர்ல்ட் மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரை

June 05th, 09:46 pm

உலகளாவிய சிறிய மகாசபை போல இங்கே பெருமளவில் கூடியிருக்கின்ற ரோட்டரி இன்டர்நேஷனல் மாநாட்டில் உரையாற்ற நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது பன்முகத்தன்மை கொண்டது, துடிப்புமிக்கது. சுழற்சங்கத்தினராகிய நீங்கள் அனைவரும் உங்களின் சொந்தத்துறைகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இருப்பினும் பணியுடன் மட்டும் நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த புவிக்கோளினை சிறப்பானதாக மாற்றும் விருப்பம் உங்களை இந்தத் தளத்திற்கு ஒருங்கிணைத்து அழைத்து வந்துள்ளது. வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவையாக இது இருக்கிறது.

சர்வதேச ரோட்டரி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் உரை

June 05th, 09:45 pm

சர்வதேச ரோட்டரி உலக உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். ரோட்டரி சங்க உறுப்பினர்களை ‘வெற்றி மற்றும் சேவையின் உண்மையான கலவை' என்று குறிப்பிட்ட பிரதமர், “ரோட்டரி சங்கத்தின் இதுபோன்ற ஒவ்வொரு கூட்டமும் சிறிய அளவிலான சர்வதேச மன்றத்தைப் போல் உள்ளது. இவற்றில் பன்முகத்தன்மையும், துடிப்பும் உள்ளன”, என்று கூறினார்.

லைஃப் இயக்கத்தின் துவக்கம் விழாவில் பிரதமரின் உரை

June 05th, 07:42 pm

இன்றைய தருணமும், தேதியும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் இயக்கத்தை நாம் துவக்குகிறோம். “ஒரே ஒரு பூமி” என்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் முழக்கமாகும். “இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வு” என்பது அதன் மையப் பொருள்.

PM launches global initiative ‘Lifestyle for the Environment- LiFE Movement’

June 05th, 07:41 pm

Prime Minister Narendra Modi launched a global initiative ‘Lifestyle for the Environment - LiFE Movement’. He said that the vision of LiFE was to live a lifestyle in tune with our planet and which does not harm it.

சர்வதேச முன்முயற்சியான ‘லைப் இயக்கத்தை‘ 5 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

June 04th, 02:08 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, 5 ஜுன், 2022 அன்று, ‘சுற்றுச்சூழல் இயக்கத்திற்கான வாழ்க்கை முறையை‘ கானொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமுதாயத்தினர் மற்றும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவதற்கும், வலியுறுத்துவதற்கும், கல்வியாளர்கள், பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ‘யோசனை கோருவதற்கான லைப் சர்வதேச அழைப்பு‘ தொடங்கும். இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் சிறப்புரை ஆற்றுகிறார்.

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டில் பிரதமரின் உரை

May 04th, 12:15 pm

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக் கான சர்வதேச நான்காவது மாநாட்டில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் துவக்க உரை வழங்கினார்

May 04th, 10:29 am

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று துவக்க உரையாற்றினார். ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு ஸ்காட் மாரிசன், கானா அதிபர் மாண்புமிகு நானா அட்டோ டன்க்வா அகுஃபோ-அட்டோ, ஜப்பான் பிரதமர் மாண்புமிகு ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் மாண்புமிகு ஆண்ட்ரி நாரினா ரஜோலினா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.

டென்மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி அறிக்கை

May 03rd, 07:11 pm

எனக்கும் எனது பிரதிநிதி குழுவினருக்கும் டென்மார்க்கில் வழங்கப்பட்ட அருமையான வரவேற்பிற்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கும் உங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி. உங்களது அழகிய நாட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்த இரு பயணங்களினால் நமது உறவிற்கு நெருக்கத்தையும் ஆற்றலையும் சேர்க்க நம்மால் இயன்றுள்ளது. நம் இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், கருத்து சுதந்திரம் சட்ட விதிமுறைகளை பகிர்வது மட்டுமல்லாமல், நிறைவு தரும் ஆற்றல்களையும் பெற்றுள்ளோம்.

கூட்டறிக்கை : 6-வது இந்தியா – ஜெர்மனி அரசுகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம்

May 02nd, 08:28 pm

இன்று, ஜெர்மன் பிரதமர் திரு.ஒலாப் ஸ்கால்ஸ் மற்றும் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆகியோரது கூட்டுத் தலைமையின்கீழ், ஜெர்மனி மற்றும் இந்திய அரசுகள், அரசாங்க அளவிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளன. இருநாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, இருநாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிற முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினரும் இதில் இடம்பெற்றனர்.

பிரிட்டிஷ் பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

April 22nd, 12:22 pm

பிரதமர் என்ற முறையில் இது அவரது முதலாவது பயணமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பழைய நண்பர் என்ற முறையில் அவர் இந்தியாவைப்பற்றி நன்கு அறிந்தவராவார். பல ஆண்டுகளாக, பிரதமர் ஜான்சன், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இணையவழி உச்சிமாநாடு

March 17th, 08:30 pm

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே காணொலி வாயிலான இரண்டாவது உச்சிமாநாடு 2022 மார்ச் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது காணொலி காட்சி மூலமான உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.

நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி’ குறித்து பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 04th, 11:05 am

நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி இந்திய பாரம்பரியத்தை எதிரொலிப்பதுடன், வருங்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களை எட்டுவதற்கு ஒரு வழியாகவும் உள்ளது. நீடித்த எரிசக்தி வளங்கள் மூலம் மட்டுமே நீடித்த வளர்ச்சியை அடைய முடியும். 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வை அடைய கிளாஸ்கோ மாநாடு உறுதி பூண்டது.

‘நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி’ குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

March 04th, 11:03 am

‘நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி’ என்பது குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய தொடர் இணைய வழிக் கருத்தரங்கில் இது ஒன்பதாவது ஆகும்.

தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்.

December 20th, 09:07 pm

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். அடுத்த மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக தொழில்துறை பிரதிநிதிகளுடன் பிரதமர் இது போன்று உரையாடுவது இது இரண்டாவது முறையாகும்.

கிளாஸ்கோ சிஓபி26 உச்சிமாநாட்டில், பசுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துதல் குறித்த அமர்வின் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 02nd, 07:45 pm

இன்று ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ தொடக்கத் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறீர்கள். சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி மற்றும் இங்கிலாந்தின் பசுமைமின் தொகுப்பு நடவடிக்கை, எனது பல ஆண்டு தொலைநோக்காக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ திட்டம் இன்று வலுவான உருவத்தைப் பெற்றுள்ளது. மாண்புமிகு தலைவர்களே தொழில்புரட்சி, படிம எரிபொருள்களால் ஏற்பட்டது. பல நாடுகள் படிம எரிபொருள்களால் செழிப்படைந்துள்ளன. ஆனால் நமது பூமி மற்றும் சுற்றுச்சூழல் மோசமடைந்து. படிம எரிபொருள் கண்டுப்பிடிப்புக்கான போட்டி பூலோக –அரசியல் பதற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால் இன்று தொழில்நுட்பம் நமக்கு மிகப் பெரிய மாற்றை அளித்துள்ளது.

கிளாஸ்கோவில் நடைபெற்றசிஓபி26 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி –இஸ்ரேல் பிரதமர்சந்திப்பு

November 02nd, 07:16 pm

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட்டும் சந்தித்து பேசினர்.