ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே சாதாரண முறையில் பிரிக்ஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்த ஊடக செய்திக்குறிப்பு
November 30th, 10:24 pm
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அய்ரஸில் ஜி-20 உச்சி மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் தலைவர்களின் சாதாரண முறையிலான வருடாந்தர கூட்டத்திற்காக நவம்பர் 30, 2018 அன்று பிரேசில் கூட்டுக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, இந்தியக் குடியரசு, சீனாவின் மக்கள் குடியரசு, தென்னாப்பிரிக்கக் குடியரசு ஆகியவற்றின் அரசுத் தலைவர்களாகிய நாங்கள் சந்தித்துள்ளோம். 2018-ல் ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்படுவதற்காக அர்ஜெண்டினா அரசுக்கு எங்களது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.